நாளை சட்டமேலவை தேர்தல்.. மத்திய அமைப்புகளை மத்திய பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது.. நானா படோல்

 
நானா படோல்

சி.பி.ஐ. போன்ற மத்திய அமைப்புகளை மத்திய பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் குற்றம் சாட்டினார்.


மகாராஷ்டிராவில் சட்டமேலவையில் 9 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 7ம் தேதி முடிவடைகிறது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பா.ஜ.க.வின் சட்டமேலவை உறுப்பினர் ஒருவர் இறந்ததால்  அந்த இடம் காலியாக உள்ளது. மொத்தமுள்ள 10 இடங்களுக்கான தேர்தல் நாளை (ஜூன் 20) நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 10 இடங்களுக்கு மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் கூட்டணியை சேர்ந்த சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். பா.ஜ.க. 5 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்

மாநிலங்களவை தேர்தல் போன்று (எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்த பின் அந்த கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியிடம் வாக்கு சீட்டை காட்ட வேண்டும்) சட்டமேலவை உறுப்பினர் தேர்தல் நடக்காது. சட்டமேலவை உறுப்பினர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படும். இதனால் கட்சி மாறி வாக்களிப்பது குறித்த அச்சம், சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் நிலைப்பாடு போன்றவை வேட்பாளர்களை யூகிக்க வைக்கும். நாளை சட்டப்மேலவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அமைப்புகளை பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் இது தொடர்பாக கூறுகையில், மத்திய அமைப்புகளை (சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை  உள்ளிட்டவை) மத்திய அரசு தவறாக  பயன்படுத்துகிறது. மாநிலங்களவை தேர்தலின் போது மிரட்டல்கள் விடுக்கப்பட்டது, தற்போதும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எங்களிடம் இது பற்றிய பதிவு உள்ளது, சரியான நேரத்தில் அவற்றை பொதுமக்கள் முன் சமர்ப்பிப்போம் என தெரிவித்தார்.