காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் என்னையும், கட்சியையும் இழிவுப்படுத்த பா.ஜ.க. முயற்சி.. நானா படோல்

 
பா.ஜ.க.

மகாராஷ்டிராவில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் என்னையும், கட்சியையும் இழிவுப்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது என அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பா.ஜ.க.வின் பல தலைவர்களுக்கு எதிராக பல வழக்குகளை தொடர்ந்தவர் வக்கீல் சதீஷ் உகே.   நாக்பூரில் ரூ.11.5 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக போலி ஆவணம் தயாரித்ததாக சதீஷ் உ.கே மற்றும் அவரது சகோதரர் பிரதீப் உகே மீது நாக்பூர் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். கடந்த வியாழக்கிழமையன்று சதீஷ் உகேவும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பண மோசடி தடுப்புச் சட்டம்  நீதிமன்றம், ஏப்ரல் 6ம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க அமலாக்க இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டது.

நானா படோல்

இந்நிலையில் வக்கீல் பிரதீப்  உகேவை,  என்னுடன் தொடர்புபடுத்தி  என்னையும், காங்கிரஸையும் அவதூறு செய்ய பா.ஜ.க. முயற்சி செய்கிறது என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் குற்றம் சாட்டினார். நாக்பூரில் நானா படோல் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இன்று என் சார்பாகவும் நாளை வேறொருவர் சார்பாகவும் ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு செல்லலாம்.

காங்கிரஸ்

என்னையும், காங்கிரஸ் கட்சியையும் களங்கப்படுத்துவதற்காக இப்படியெல்லாம் சொல்கிறார்கள். மகாராஷ்டிராவில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், எனது பெயரை உகேவுடன் இணைத்து பா.ஜ.க. என்னை அவதூறு செய்ய வழிவகுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.