நடுசென்டர் என்பதில் நடு என்பதும் சென்டர் என்பதும் ஒன்றுதான் - நயினார் நாகேந்திரன்

 
d

நடு சென்டர் என்பதில் நடு என்பதும் ஒன்றுதான் சென்டர் என்பது ஒன்றுதான் என்று தமிழ்நாடு விவகாரம் குறித்து கூறியுள்ளார் நயினார் நாகேந்திரன்.

 நெல்லை மாநகரத்தில் தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.  பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இந்த விழாவில் பங்கேற்றார் .  

e

நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,  ஈரோடு பகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா ஏற்கனவே போட்டியிட்டது.   தற்போது இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி முதலிடம் பேசி முடிவு செய்யும் என்றார்.

 தொடர்ந்து அது குறித்து பேசிய நயினார் நாகேந்திரன்,   8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏற்கனவே வெற்றி வாய்ப்பை இழந்தோம்.  ஆனால் இந்த முறை நிச்சயம் எப்படியும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றவரிடம்,   அதிமுக -பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பது குறித்த  கேள்விக்கு, கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் வரும் போது இணைந்து தான் செயல்படுவோம் என்றார்.

 தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று ஆளுநர் சொன்னதாக, தமிழ்நாடு என்பதை மாற்றப்பார்க்கிறார் ஆளுநர் என்று சர்ச்சை எழுந்தது.  பின்னர் ஆளுநர் தான் அப்படி சொல்லவில்லை என்று விளக்கம் அளித்தது குறித்த கேள்விக்கு,   நடு சென்டர் என்று சொன்னால் அதில் நடு என்பதும் சென்டர் என்பது ஒன்றுதான்.  அப்படித்தான் தமிழ்நாடு ,தமிழகம் இரண்டும் ஒன்றுதான் என்றார்.

 அதிமுகவில் இருக்கும் மோதல் குறித்த கேள்விக்கு,  அதிமுகவை பொருத்தவரைக்கும் யார் எப்படி பேசினாலும் அவர்கள் ஒன்றுபட்டால் தான் அதிமுகவுக்கு பலம். கருத்து வேறுபாட்டுடன் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் பலவீனம் தான் ஏற்படும் என்றவரிடம்,   அதிமுகவை பாஜக பலவீனப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு, அதிமுகவை பாஜக பலவீனப்படுத்தவில்லை.   அப்படி பலவீனப்படுத்துவதாக இருந்தால் ஏன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பினார்.