என்னா பேச்சு.. அந்த பேச்சுக்காகவே ராஜ் தாக்கரேவை கைது செய்ய வேண்டும்.. தேசியவாத காங்கிரஸ்

 
மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்…. பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசிய ராஜ் தாக்கரே….

மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் கோரிக்கைகளை முன்வைத்தற்காக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே  கைது செய்யப்பட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்.

மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அண்மையில், மகாராஷ்டிராவில் கலவரம் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. பிரார்த்தனை செய்வதை யாரும் எதிர்க்கவில்லை. மசூதிகளில் பொருத்தப்பட்டுள்ள மற்றும் நாடு முழுவதும் சட்டவிரோதமாக உள்ள ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும். பிரார்த்தனையை ஒலி பெருக்கியில் செய்தால் நாங்களும் அதற்கு ஒலி பெருக்கிகளையும் பயன்படுத்துவோம். சட்டத்தை விட மதம் பெரியதல்ல என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். மே 3ம் தேதிக்கு பிறகு என்ன செய்வது என்று பார்க்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ராஜ் தாக்கரேவை கைது செய்ய வேண்டும் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிப் ஷேக்

தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசிப் ஷேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மீது இந்திய தண்டனை சட்டத்தின் (ஐ.பி.சி.) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் இது  போன்ற (மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும்) கோரிக்கைகளை முன்வைத்தற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும்.

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து திருப்பம்… மாநில உள்துறை அமைச்சராக திலீப் வால்ஸ் பாட்டீல் நியமனம்

ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸூக்கு கடிதம் எழுதியுள்ளேன். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சட்டத்தை மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் ராஜ் தாக்கரேவின் எச்சரிக்கை எதிரொலியாக, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் கடந்த திங்கள்கிழமையன்று , மத தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது உரிய அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார்.