அமித் ஷா டெல்லியை வகுப்புவாத கலவரங்களிலிருந்து பாதுகாக்க தவறிவிட்டார்... சரத் பவார் குற்றச்சாட்டு

 
ஜெயிலுக்கு போனவங்க எல்லாம் என்னிடம் கேள்வி கேட்க கூடாது- அமித் ஷாவை தாக்கிய சரத் பவார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியை வகுப்புவாத கலவரங்களிலிருந்து பாதுகாக்க தவறிவிட்டார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டினார்.

தேசியவாத காங்கிரஸ்  தலைவர் சரத் பவார் , தொண்டர்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது: சில நாட்களுக்கு முன், மதக்கலவரம் காரணமாக டெல்ல எரிந்து கொண்டிருந்தது. டெல்லி யூனியன் பிரதேசம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அதன் காவல் துறை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கையாளப்படும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அமித் ஷா நகரத்தை வகுப்புவாத கலவரங்களிலிருந்து பாதுகாக்க தவறிவிட்டார். டெல்லியில் ஏதாவது நடந்தால், அந்த செய்தி உலகிற்கு செல்லும். டெல்லியில் அமைதியின்மை இருப்பதாக உலகம் கற்பனை செய்யும். கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் மோதல்கள் நடந்தன. சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த கடைகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்கள் ஒரு பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ள கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அமித் ஷா

பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இது பொதுவான காட்சி. நம் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த  மற்றும் மத வெறுப்பை தூண்டுவதற்காக காஷ்மீர் பைல்ஸ் படம் எல்லா இடங்களிலும் காட்டப்பட்டது. 1990களின் முற்பகுதிகளில் ஜம்மு அண்ட் காஷ்மீரில் கிளர்ச்சி தீவிரமடைந்தபோது, வி.பி.சிங் பிரதமராக இருந்தார், அவருடைய அரசுக்கு பா.ஜ.க. ஆதரவு இருந்தது. ஆனால் இந்த உண்மை அந்த படத்தில் மறைக்கப்பட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் ஆணையை (தோல்வி) எதிர்க்கட்சிகள் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டன. இந்த நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் வகுப்புவாத சக்திகளை நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். மோசமான வறுமையில் இருக்கும் இளைஞர்களின் பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும். இரட்டை இலக்க பணவீக்கத்தில் தத்தளிக்கும் சாமானியர்களின் சுமையை குறைக்க வேண்டும். 

பா.ஜ.க.

முன்பு மற்ற நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும் போது, அவர்கள் டெல்லி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா செல்வார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. அவர்கள் (வெளிநாட்டு தலைவர்கள்) இந்தியாவுக்கு வந்தாலும், குஜராத்திற்கு மட்டும் வருகிறார்கள்.டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் (மத்திய அரசு) மற்ற மாநிலங்களை பற்றி என்ன நனைக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் சமூகங்களுக்கும், மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. அமலாக்க இயக்குனரகம் குறித்து சில பேருக்குதான் தெரியும். ஆனால் இப்போது எல்லா இடங்களிலும் அமலாக்க இயக்குனரகம் குறித்து தெரியும். தேசியவாத காங்கிரஸின் நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோர் பொய்யாக கட்டமைக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. அமலாக்க இயக்குனரகம், சி.பி.ஐ. மற்றும் பிற அமைப்புகள் மூலம் அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.