குடியரசு தலைவர் தேர்தல் போட்டியில் நான் இல்லை.. சரத் பவார் அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

 
ஜெயிலுக்கு போனவங்க எல்லாம் என்னிடம் கேள்வி கேட்க கூடாது- அமித் ஷாவை தாக்கிய சரத் பவார்

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நான் போட்டியிட மாட்டேன் என சரத் பவார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. அரசியலமைப்பின் 62வது பிரிவின்படி, பதவிக் காலம் முடிவடைந்ததால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலை பதவிக் காலம் முடிவடைதற்கு முன்பே நடத்தி முடிக்க வேண்டும். இதன்படி, நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராம் நாத் கோவிந்த்

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியானது. இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சரத் பவார் தெரிவித்துள்ளார். சரத் பவாரின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தலைவர் தேர்தலில் மூத்த அரசியல்வாதி சரத் பவாரை முன்மொழிந்தால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என காங்கிரஸ் கட்சிகள் கணக்கு போட்டன.

காங்கிரஸ்

ஆனால், குடியரசு தலைவர் பதவி போட்டியில் நான் இல்லை சரத் பவார் அறிவிப்பு எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் தேசியவாத அமைச்சரவை அமைச்சர்களை சந்தித்து பேசினார். அப்போது, நான் போட்டியில் இல்லை, குடியரசு தலைவர் பதவிக்கு நான எதிர்க்கட்சி வேட்பாளராக இருக்க மாட்டேன் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் திலிப் வால்ஸ் பாட்டீல் உறுதிப்படுத்தினார்.