போடாத சாலைக்கு பல கோடி பில் - அதிகாரிகளை தப்பிக்க வைக்கும் சதி முயற்சிகள் - சிக்கலில் அமைச்சர் எ.வ.வேலு

 
e

 சாலையே போடாமல் பல கோடி ரூபாய் பணத்தை ஒப்பந்ததாரருக்கு கரூர் நெடுந்தாலைத் துறை அதிகாரிகள் பண பட்டு வாடா செய்து உள்ளதாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டி இருக்கிறது அறப்போர் இயக்கம்.   இதுகுறித்து அறப்போர் இயக்கம் புகார் அளித்த பிறகு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது நடந்து 6 மாதங்கள் ஆகியும் இது வரை அந்த அதிகாரிகள் மீது வழக்கும் பதியவில்லை. விசாரணையும் நடத்தவில்லை. காரணம் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறது அறப்போர் இயக்கம்.

கரூரில் போடாத சாலையை போட்டதாக சொல்லி பணம் திருடிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளை தப்பிக்க வைக்கும் சதி முயற்சிகளை தடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறப்போர் இயக்கம் மீண்டும் புகார் கொடுத்திருக்கிறது. 

ev

 ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் இந்த குற்றச்சாட்டினை சமர்ப்பித்து உள்ளதாகவும்,  ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் இது குறித்து வழக்கு பதிவு செய்யவில்லை.  இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு பதில் சொல்வாரா? என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 இது குறித்து அவரது அறிக்கையில்,   மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் நோக்கில் சாலை போடாமலேயே 5 கோடி ரூபாய் சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா என்னும் ஒப்பந்ததாரருக்கு கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 2022 இல் பணம் கொடுத்து ஊழல் நடந்திருக்கிறது.  இது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் புகார் அளித்திருந்தது.  தற்போது கூடுதல் முக்கிய ஆதாரங்களையும் சமர்ப்பித்து இருக்கிறது.


 துறை ரீதியான விசாரணை செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம்.   ஆனால் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.   அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மேலும் பல ஆதாரங்களை திரட்டி இருக்கிறது . இதை முதன் முதலில் வெளிக்கொண்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலரிடம் புகார் கொடுத்தார்.  சாலை போடாமலேயே பணம் கொடுத்தார்கள் என்கிற அவரது குற்றச்சாட்டு உண்மை என்று கண்காணிப்பு பொறியாளர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்ததால் , அறிக்கையின் நகலினை ஆர்டிஐயில் பெற்று அறப்போர் தற்போது லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி இருக்கிறது.

மார்ச் மாதம் சாலை போடப்பட்டது போல தயாரிக்கப்பட்ட போலி பில் செலவினங்கள் கொடுக்கப்பட்ட ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையில் சமர்ப்பித்து இருக்கிறோம்.  ஊழல்வாதிகளை காப்பாற்ற டிஎஸ்பி தலைமையில் பந்தோபஸ்து கொடுத்து ஊழல் ஆதாரங்களை அழிப்பதற்காகவும் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காகவும் ஏப்ரல் மாதத்தில் சாலை போட்டதற்கான ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையில் சமர்ப்பித்திருக்கிறோம் . ஆகவே உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அறப்போர் இயக்கம் . பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக இதுவரை அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும்.

  இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்போம் என்று சூளுரைத்தார் அமைச்சர் எ.வ.வேலு.    ஆனால் ஏன் வழக்கு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை அவர் விவரிக்க வேண்டும்.   நடவடிக்கை எடுக்கப்படும் வரைக்கும் அறப்போர் இயக்கம் முயற்சிகளை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.