மக்களுக்கு என்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்று சொல்வது அரசின் வேலை அல்ல... முக்தர் அப்பாஸ் நக்வி

 
எதிர்க்கட்சியினரிடம் தவறு இருப்பதால்தான் விசாரணையில் பங்கேற்க விரும்பவில்லை.. முக்தர் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டு

மக்களுக்கு என்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்று சொல்வது அரசின் வேலை அல்ல என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார். 
 

கடந்த சில வாரங்களாக நம் நாட்டின் சில பகுதிகளில் மத ஊர்வலங்களின் போது பெரும்பான்மை இந்துக்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம் சமூகததினருக்கும இடையே சிறிய அளவிலான மதக் கலவரங்கள் வெடித்தன. இந்துக்கள் புனிதமானதாக கருதும் ராம நவமியன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு வழங்கப்பட்டதை எதிர்த்து அந்த பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மத்திய சிறுபான்மை விவகார துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அசைவ, சைவ உணவுகள்

மத்திய சிறுபான்மை விவகார துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் அமைதி மற்றும் செழுமையை ஜீரணிக்க முடியாத விளிம்புநிலை கூறுகள், இந்தியாவின் உள்ளடக்கிய கலாச்சாரம் மற்றும் அர்ப்பணிப்பை அவதூறு செய்ய முயற்சிக்கின்றன. மக்களுக்கு என்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்று சொல்வது அரசின் வேலை அல்ல. 

ஹிஜாப்

ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் விருப்பப்படி உணவு உண்ண சுதந்திரம் உள்ளது. ஹிஜாப் அணிவதற்கு இந்தியாவில் தடை இல்லை. சந்தைகளிலும் பிற இடங்களிலும் ஒருவர் ஹிஜாப் அணியலாம். ஆனால் ஒவ்வொரு கல்லூரிக்கும் அல்லது நிறுவனத்துக்கும் ஒரு ஆடைக் கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் அலங்காரம் உள்ளது. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேறு நிறுவனத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.