நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையை தொடர்ந்து ஒரு சனிக்கிழமை வரும்.. உ.பி. முதல்வரின் ஆலோசகர்

 
மிருத்யுஞசய் குமார்

நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையை தொடர்ந்து ஒரு சனிக்கிழமை வரும் என நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்து எதிர்ப்பு வன்முறையில் ஈடுபட்டுள்ள கலவரக்காரர்களுக்கு எச்சரிக்கை உத்தர பிரதேச முதல்வரின் ஆலோசகர் எச்சரிக்கை செய்துள்ளார். 

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக சுமார் 2 வாரங்களுக்கு முன் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசுகையில், நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கைது செய்து தண்டனை வழங்கக்கோரி டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. 

கல் வீச்சு சம்பவம்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞசய் குமார் டிவிட்டரில், புல்டோசர் படத்தை பதிவேற்றம் செய்து, நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையை தொடர்ந்து ஒரு சனிக்கிழமை வரும் என பதிவு செய்து இருந்தார். அதாவது, குற்றவாளிகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை மறைமுகமாக பதிவு செய்து இருந்தார்.

புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு

ஹரியானா பா.ஜ.க.வின் ஐ.டி. பொறுப்பாளர் அருண் யாதவ் டிவிட்டரில், இப்போது வெள்ளிக்கிழமை கல் (வீச்சு) தினம் என்பதால், சனிக்கிழமை புல்டோசர் தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என பதிவு செய்துள்ளார்.