மதுரையில் மோடி வெற்றி - பாஜகவினர் கனவுக்கு திகவினர் எதிர்ப்பு

 
m

மதுரையில் போட்டியிட்ட மோடி வெற்றி -  பாஜகவினர் கனவுக்கு திகவினர் எதிர்ப்பு

 பிரதமர் பிரதமர் மோடி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக மதுரை மாநகரம் முழுவதும் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . அந்த போஸ்டர்களின் மேல் திராவிடர் கழகத்தினர், பாஜகவினரின் கனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.

இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது.   இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக இருந்து வருகிறார்.   இந்த நிலையில் அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. 

mo

 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.    பாஜகவும் பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறது.   வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற விவரம் தெரியவில்லை.  ஆனால் அவர் தமிழ்நாட்டில் மதுரை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அப்பகுதி பாஜகவினர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.  

அவர்கள் விருப்பத்தின் ஒரு வடிவமாகவே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதாக அவர்கள் கனவில் உள்ளனர்.   இந்த கனவை நிஜமாக்கி பார்க்க வேண்டும்  என்ற நோக்கத்தோடு மதுரை தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி  வெற்றி பெற்றார் என்றும்,  தொலைக்காட்சியில் பிரேக்கிங் நியூஸ் வந்துள்ளது மாதிரியும் போஸ்டர் வடிவமைத்து அதை மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர் பாஜகவினர்.

 மதுரை தொகுதியில் போட்டியிட்ட மோடி வெற்றி பெற்றதாக பாஜகவினர் ஒட்டி இருக்கும் இந்த போஸ்டரின் மேல் திராவிடர் கழகத்தினர்,   ’’சனாதனம் அழியட்டும் சமதர்மம் மலரட்டும் ’’என்று போஸ்டரை ஒட்டி எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றனர்.