நம் நாட்டில் தற்போது இரண்டு வகையான அரசியல் நிலவுகிறது... ஒன்று குடும்ப பக்தி, மற்றொன்று தேச பக்தி.. பிரதமர் மோடி

 
பிரதமர் மோடி

நம் நாட்டில் தற்போது இரண்டு வகையான அரசியல் நிலவுகிறது. ஒன்று குடும்ப பக்தி பக்கமும், மற்றொன்று தேச பக்தி பக்கமும் நிற்கிறது என் பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்தார்.

பா.ஜ.க. நேற்று தனது 42வது  நிறுவன தினத்தை கொண்டாடியது. பா.ஜ.க.வின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். மோடி பேசியதை பா.ஜ.க. தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவு செய்து இருந்தது. பா.ஜ.க.வின் டிவிட்டர் பக்கத்தில், இன்று தொடங்கும் பா.ஜ.க.வின் சமூக நீதி முயற்சியில் கட்சி தொண்டர்கள் தீவிரமாக இணைய வேண்டும். நம் நாட்டில் தற்போது இரண்டு வகையான அரசியல் நிலவுகிறது. ஒன்று குடும்ப பக்தி பக்கமும், மற்றொன்று தேச பக்தி பக்கமும் நிற்கிறது. 

பா.ஜ.க.

பல தசாப்தங்களாக சில அரசியல் கட்சிகள் நம் நாட்டில் வாக்கு வங்கி அரசியலை மட்டுமே செய்தன. ஒரு சிலருக்கு மட்டுமே வாக்குறுதிகளை அளித்தன. பெரும்பாலான மக்களை ஏங்க வைத்தது. இவை அனைத்தும் வாக்கு வங்கி அரசியலின் விளைவு. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நாட்டுக்காக எதுவும் செய்ய முடியாது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்ட காலம் இருந்தது. இன்று, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தேசம் மாறுகிறது மற்றும் வேகமாக முன்னேறுகிறது என்று பெருமையுடன் கூறுகிறார்கள். உலகமே இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் போது, மனிதநேயத்தை பற்றி உறுதியாக பேசக்கூடிய நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது. 

கன்னியாகுமரி

இந்த ஆண்டு நிறுவன தினம் மூன்று காரணங்களுக்காக குறிப்பிடத்தக்கது. இந்தியாவும் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. வேகமாக மாறிவரும் உலகளாவிய ஒழுங்கு மற்றும் நான்கு மாநில தேர்தல்களில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. 3 பத்தாண்டுகளுக்கு பறிகு ஒரு கட்சி மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களை  தொட்டுள்ளது. நாடு மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள பா.ஜ.க.வின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் கோஹிமா வரை ஒரே பாரதம்,  சிறந்த இந்தியா என்ற உறுதியை பா.ஜ.க. தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.