அந்த காரில் சென்றதால் என்னைப்பார்த்தும் பயப்படுகிறார் மோடி - ஆ.ராசா

 
a

அந்தக் காரில் சென்றதால் என்னை பார்த்தும் பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று பேசி உள்ளார் ஆ.ராசா.  காவியா? கருப்பு சிவப்பா ?என்று பார்த்து விடுவோம் என்று சவால் விட்டார். 

ச்ம்

 திருச்சியில் திமுக சார்பில்  இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்பி பங்கேற்று பேசினார்.  கூட்டத்தில் அவர் பேசியபோது,  இந்தி வாயிலாக இந்துத்துவாவை கொண்டு வந்து தமிழரின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கின்றார்கள்.   சாதியும் மதமும் நம்மை பிரிக்கும். ஆனால் மொழி மட்டும்தான் நம்மை ஒன்று சேர்க்கும்.   அன்று ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களுக்கு எதிராக வந்த இந்துத்துவா இன்று பல மடங்கு வளர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக வந்திருக்கிறது.  ஆனால் அவர்கள் மூவரும் இணைந்த ஒரே சக்தியாக சங்பரிவாரையும் இந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார் ஸ்டாலின் என்றார்.

 தொடர்ந்து பேசிய ஆ. ராசா,   தமிழக முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்.  அவரது காரில் செல்வதால் என்னைப்பார்த்தும் பயப்படுகிறார் மோடி.   கருப்பு சிவப்பு கரை போட்ட வேட்டியை பார்த்து பயப்படுகிறார் என்று சொன்ன ஆ. ராசா,   வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காவியா? கருப்பா சிவப்பா? என்று பார்த்து விடுவோம் என்று சவால் விடுத்தார்.