மோடியும், அமித்ஷாவும் ஓபிஎஸ்சை ஆதரிக்க மாட்டார்கள் - ஆதரவாளர்களிடம் பேசிய எடப்பாடி

 
எ

அதிமுகவின் மாஜிக்கள் பலரும் ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள்.  அதிலிருந்து தங்களை எடப்பாடி பழனிச்சாமி காப்பாற்றுவார் என்று தான் அனைவரும் அவர் பக்கம் சென்றிருக்கிறார்கள் என்ற பேச்சு பரவுகிறது.  இந்த நிலையில் மாஜிக்களின் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டு நடந்து வருவது அவர்களை பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது .

பாஜக ஓபிஎஸ் பக்கம் இருக்கிறது.   அதனால் தான் ஓபிஎஸ்ஐ ஒரம் கட்டி விட்டதால் பாஜகவின் அழுத்தத்தால் மாஜிக்கள் மீது ரெய்டு பாய்கிறது என்று அதிமுகவில் ஒரு சலசலப்பு இருக்கிறது.   இதை மறுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

மொ

 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி,  சில தினங்களில் டெல்லியில் தங்கி இருக்க முடிவு செய்து இருக்கிறார்.  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ. பி. நட்டா,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்.

 இதுவரைக்கும் மோடி, அமித்ஷாவுடன்  எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிகழவில்லை.    இனி அதற்கான வாய்ப்புகள் அமையும் என்று தெரிகிறது.   இந்த நிலையில் எடப்பாடி டெல்லியில் முகாமிட்டிருக்கும் நிலையில்,  ஓபிஎஸ்-க்கு பாஜக ஆதரவு இல்லை . பிரதமரின் ஆதரவு இருப்பதாக அவராகவே சொல்லிக் கொள்கிறார் என்று எடப்பாடியின் தரப்பு சொல்லி வருகிறது.

 பாஜகவின் அழுத்தத்தினால் தங்கள் மீது ரெய்டு பாயும் என்று அச்சத்தில் இருக்கும் ஆதரவாளர்களுக்கு,   ’’மோடியும்,  அமித் ஷாவும் அதிமுக என்கிற கட்சியை தான் ஆதரிப்பார்கள்.  ஓபிஎஸ் என்ற தனிநபரை ஆதரிக்க மாட்டார்கள்.  வருமான வரி சோதனைகள் எல்லாம் தற்காலிகமானவை.  இது நிரந்தரமல்ல என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார் எடப்பாடி.   எப்படியும் தங்களை காப்பாற்றி விடுவார் என்று அவர்கள் நம்பிக்கையில் இருப்பதாக தகவல்.

எடப்பாடியும்,   மாஜிக்கள் மீது வருமானவரித்துறை , அமலாக்கத்துறை நடத்தும் சோதனைகள் பற்றியும் பாஜக தலைவர்களிடத்தில் அதிருப்தியை தெரிவித்து இருக்கிறாராம்.