பக்தர்களை கொந்தளிக்க வைத்த அமைச்சர்கள்

 
du

 செருப்பு காலுடன் முப்பதுக்கும் மேற்பட்ட திமுகவினர் கோவிலுக்குள் வந்ததால் அதை அமைச்சர்களும் கண்டிக்காததால் அமைச்சர்களை கண்டித்தும், செருப்பு  காலுடன் வந்தவர்களையும் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

du2

 வேலூரில் இந்து சமய அறங்காவலர் குழு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று முன் தினம் இரவு நடந்தது.   வேலூர் செல்லியம்மன் கோவிலில் நடந்த இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு தலைமை வகித்தார்.    நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன் பங்கேற்றார்.

du3

 துரைமுருகன் விழாவில் பேசிய போது,  ’’ அறநிலையத்துறையும் அரசுத்துறை தான்.  அது சார்ந்த விழாவும் அரசு நிகழ்ச்சி தான்.   அதனால் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்.  இந்த விழாவில் ஆரம்பத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடாதது எனக்கு வருத்தம்.  இனிவரும் நாட்களில் ஆவது அறநிலையத் துறையின் சார்பில் நடைபெறும்  விழாக்களில் தமிழ்த்தாய் பாடல்கள் பாடவேண்டும். அதை கட்டாயப்படுத்த வேண்டும்’’ என்றார்.

se

 இந்த கூட்டத்திற்கு வந்தவர்களில் 30க்கும்  மேற்பட்ட திமுகவினர் செருப்புக்காலுடன் கோவிலுக்குள் வந்தனர்.  இதை சிலர் வீடியோ எடுத்து வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது .  கோவிலுக்குள் செருப்பு காலுடன் வந்தவர்களை கண்டித்தும் , அதை கவனித்தும் அவர்களை கண்டித்து நடவடிக்கை எடுக்காத அமைச்சர்களை கண்டித்தும் இந்து முன்னணியினர் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தையும் முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.