ஈபிஎஸ் வீட்டுக்கு சென்ற வேகத்தில் திரும்பிய அமைச்சர்கள்!
எடப்பாடி பழனிசாமியின் மனைவி மற்றும் அவரது உதவியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே திமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது காலிவதியாகிவிட்டதாக எடப்பாடி தரப்பு அறிவித்துள்ளது. இந்த சூழலில் இருவரிடமும் தனித்தனியாக அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிஆர்பிஎஃப் வீரர் களுக்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி தனிமைப் படுத்திக்கொண்டார், இதனால் தன்னை சந்திக்கவரும் யாரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அவரை காண அவரது இல்லத்துக்கு சென்ற சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.ஆர் விஜயபாஸ்கர்,சி.விஜயபாஸ்கர், காமராஜர், தங்கமணி ஆகியோர் சென்ற வேகத்திலேயே திரும்பி வீட்டுக்கு சென்றுவிட்டனர்.