பெரியார் சிலை அருகே பூமி பூஜை செய்த அமைச்சர்! கொதித்தெழும் திமுக எம்பி

 
ட்ர்

அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தில் இன்று 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதற்காக பூமி பூஜை விழா என்று கரூர் மாநகராட்சி சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. திருமாநிலையூர் ரவுண்டானா பெரியார் சிலை அருகில் இந்த பூமி பூஜை நடந்தது.  இதற்கு தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ச்

திமுக எம்பி செந்தில்குமார்,  அரசு நிகழ்ச்சிகளில் மத ரீதியான பூஜைகள் நடத்தக்கூடாது குறிப்பாக பூமி பூஜைகள் நடத்தக் கூடாது என்று  தொடர்ந்து கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்.  முதல்வர் பங்குபெறும் அரசு நிகழ்ச்சிகளில் எவ்வித மத பழக்க வழக்கங்கள் கடைபிடிப்பதில்லை. இது கடவுள் ஏற்பு/மறுப்பு, அனைத்து மதத்தினருக்கும், எல்லோருக்கும் ஆன அரசுபின்பு ஏன் முதல்வர் கலந்து கொள்ளாத அரசு நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள் ஓர் குறிப்பிட்ட மத பூஜை நடத்த ஏற்பாடு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று, கரூரில் நடந்த பூமி பூஜை குறித்து, ’’என்ன! செந்தில்குமார் எம்.பி? 'பூமி பூஜை விழா' நடத்துகிறார்களே?அரசு விழாவில் பூமி பூஜையா? என்று பொங்கி எழவில்லையே ஏன்?உங்கள் அதிகாரம் அரசு அதிகாரிகளிடம் மட்டும் தானா?  அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பயமா? இவ்வளவு தான் உங்கள் கொள்கை பிடிப்பா? இதை எதிர்த்து கேள்வி கேட்க தைரியமுள்ளதா? திராணியுள்ளதா?’’என்று கேட்டிருக்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

ப்

இதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு  நேரடியாக கண்டனம் தெரிவிக்காமல்,   ‘’கரூர் மாநகராட்சி பார்வைக்கு. இந்தியா ஓர் #மதச்சார்பற்ற_நாடு என்று நமது அரசியல் அமைப்பு சட்டம் உள்ள காரணத்தினால் கரூர் இந்தியாவில் அமைந்துள்ள ஓர் மாநகராட்சி என்ற அடிப்படையில் அந்த நிகழ்ச்சிக்கு பெயர் அடிகல் நாட்டுவிழா அல்லது பணிகள் துவங்கும் விழா ‘’ என்று கூறியிருக்கிறார்.

இதற்கு வலைத்தளத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.  அதுவு பெரியார் சிலை அருகில் பூமி பூஜை. சொந்த கட்சியிலே உங்களை மதிப்பது இல்லை. முடிந்தால் அங்கே சென்று காலில் மிதியுங்கள்.  சொல்வது போல, பெரியார் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தி பெரியார் கொள்கைகளை காற்றில் பறக்கவிடுவதில் விடியலுக்கு நிகர் யாருமில்லை .

மதசார்பற்ற நாட்டில் முதல்வர் ஏன் மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லணும்?அந்த விழாக்களில் கலந்து கொள்ளணும். அதுவும் கிருஸ்தவ, இசுலாமிய பண்டிகளுக்கு மட்டும் தான் அவரு வாழ்த்துவாராம். தைரியம்  இருந்தா  இதை தட்டி கேளு பார்ப்போம்.

செ

இது ஒரு பேசுபொருள் அல்ல, பொதுமக்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய இடங்களில் சென்று நடக்கும் நல்ல காரியங்களை பாருங்கள், வேண்டுமானால் நேரில் வாருங்கள் அழைத்துச் செல்கிறோம்,அதை விடுத்து பெயரை ஒரு பேசுபொருளாக கூறுவது சரியுள்ள அதேபோன்று எதிர்க்கட்சிகளுக்கும் நீங்களே தீனி போடாதீர்கள்

நீங்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும்.(நிச்சயம் சீட்டு கொடுக்க மாட்டார்கள்)அப்படி சீட்டு கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் இந்த மதசார்பற்ற கொள்கை இந்து பூஜை எதிர்ப்பு போன்ற உங்கள் கொள்கைகள் மக்கள் முன்வைத்து வோட்டு கேட்க வேண்டும்

மதசார்பற்ற நாடு என்பதை ஒப்புக் கொண்டால் உங்கள் முதல்வரை எந்த ஒரு மதத்தின் பண்டிகை க்கும் வாழ்த்து சொல்ல கூடாது என வலியுறுத்தும் தில் இருக்கிறதா உங்களுக்கு?எல்லோருக்குமான முதல்வராக இருப்பேன்னு சொன்னாரே? அதன் படி நடந்து கொண்டாரா? நாங்க மதச்சார்பற்றவங்கனு மார் தட்டிக்கொண்டிருந்தால் போதாது. செயலில் காண்பிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.