எடப்பாடி பழனிசாமி பச்சை பொய் சொல்கிறார்- செந்தில் பாலாஜி

 
senthil balaji

எடப்பாடி பழனிசாமி பச்சை பொய் சொல்கிறார்- செந்தில் பாலாஜிகடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி பச்சை பொய்யை சொல்வதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Edappadi Palanisamy to head to Delhi to meet BJP leaders, take part in  President's farewell

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சி இளைஞரணி, மாணவரணி,மகளிரணி,மகளிர் தொண்டரணி ஆகிய  நிர்வாகிகளுடன்  அமைச்சர்  செந்தில் பாலாஜி  ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில்  வரும் 12,13,14 தேதிகளில் திராவிட பயிலரங்கம்  நடைபெறுகின்றது. ஒவ்வொரு  பயிலரங்கிற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை அழைத்து வர நிர்வாகிகளை அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். கோவை மாவட்ட திமுகவிற்கு  புதிய கட்சி அலுவலகம் கட்ட ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. அவனாசி சாலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. கட்டிடம் வடிவமைப்பு பணிகள் நடைபெறுகின்றது. மிக விரைவில் அடிக்கல் நாட்டப்படப்படும். திமுக  இளைஞரணி செயலாளர் தலைமையில் அடிக்கல் விழா  நடைபெறவுள்ளது.

People's expectations sky high after massive DMK victory: Senthil Balaji-  The New Indian Express

கோவை மாவட்டத்திற்கு வரும் 23 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின்  கோவை வருகின்றார், 24 தேதி கிணத்துகடவு பகுதியில் நடைபெறும் அரசு விழாவில்  82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது. அன்றைய தினம் மாலை பொள்ளாச்சியில்  மாற்று கட்சியினர்  இணைப்பு விழா நடைபெறுகின்றது. இதில்  மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள், புதிய உறுப்பினர்கள்  என 50 ஆயிரம் பேர் இணைய இருக்கின்றனர். ஒன்றிய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தால்  100 யூனிட் இலவச மின்சரம்,  விவசாயிகள், விசைத்தறி, குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு  பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த சட்டத்தை  வாபஸ் பெற திமுக தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி கடந்த 10 ஆண்டுகளில்  அதிமுக  ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்ற பச்சை பொய்யை சொல்லி இருக்கின்றார். கடந்த 2012,2013,2014 என தொடர்ந்து மின் கட்டணம்  அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதிமுகவினரின் எஜமானர் பா.ஜ.கதான், அவர்கள் சொல்வதைதான் அதிமுக செய்யும் செய்யும். சுயமாக யோசிக்கும் அளவிற்கு அவர்களுக்கு அறிவு இல்லை” எனக் கூறினார்.