நாக்கை நீட்டி காட்டிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் - ‘எனக்கு கருநாக்கு சொன்னா பலிக்கும்..’

 
se

நான் ஒரு ஜோசியக்காரன் நான் சொன்னா அப்படியே பலிக்கும் சொல்லிவிட்டு,  எனக்கு கருநாக்கு சொன்னா பலிக்கும் என்று சொன்னதோடு அல்லாமல் நாக்கை நீட்டி காட்டி கருநாக்கு என்பத் காட்டியிருக்கிறார் அமைச்சர் செந்தில் மஸ்தான் . இதை பார்த்து கட்சி கூட்டத்தினர் இடையே சிரிப்பலை எழுந்திருக்கிறது.

u

 விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நகர செயல்வீரர்கள் கூட்டம் நடந்திருக்கிறது.  இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார் அமைச்சர் செஞ்சி மஸ்தான். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது திண்டிவனத்தில் கவுன்சிலர் தேர்தலில் சில நிர்ப்பந்தத்தின் காரணமாக கூட்டணி கட்சிக்கு சீட்டுகள் தந்தோம் . ஆனாலும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் நிரந்தர முதல்வர் என்றும்,  அவர் இறுதி மூச்சு வரைக்கும் முதலமைச்சராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும்,  ஐந்தாம் தலைமுறை உருவாக்கி விட்டோம்.  ஸ்டாலின் எந்த காலமும் முதல்வராக முடியாது என்று சொன்னார்கள்.  ஆனால் நான் அன்றே சொன்னேன் முதலமைச்சராக .மு க. ஸ்டாலின் முடிவு எடுத்துவிட்டார் என்று.  முதலமைச்சராக  ஸ்டாலின் வருவார் என்று . நான் சொன்னால் பலிக்கும்.  என் நாக்கு கருநாக்கு பலிக்கும் என்று கூறியிருக்கிறார்.

அமைச்சர் பேசும்போது நாக்கை நீட்டி கருநாக்கை காட்ட கூட்டத்தினர் இடையே சிரிப்பலை எழுந்திருக்கிறது.