நானும் ரவுடி, நானும் ரவுடி, என்பது போல் அண்ணாமலை பேசி வருகிறார்; அவர் மீது வழக்குப்பதிவு- அமைச்சர் நாசர்

 
annamalai

கோவை மலுமிச்சம்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுடன் பால் கொள்முதல் குறித்து பால்வளத்துறை கள ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, மதுக்கரையில் ஆய்வு பணியை மேற்கொண்டார். பின்னர்,  பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ் புரம் உயர் தொழில்நுட்ப ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். 

Minister Nasar

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், “ஆவின் பால் உற்பத்தி அதிகரிக்க தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக  மூழ்கிப்போன ஆவினை, இன்றைய தினம், மூழ்கிய கப்பலை, நீர்மூழ்கி கப்பலாக மாற்றி வருகிறோம். உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் முழுவதும் அனைத்து ஆவினையும் விற்பனை நிலையங்களை துவக்கி வைத்து வருகிறோம். கோவை மாநகரத்தில் இன்று ஒரு கோடி மதிப்புள்ள ஆவின் பாலத்தை திறந்து வைத்துள்ளோம். கடந்த ஆட்சியின் போது,  காலிப்பணியிடங்களை நிரப்ப முறைகேடு நடந்தது. 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பணியிடங்கள் நிறுத்தப்பட்டு விட்டது. அதனை முறைப்படுத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஆவின் தலைவர் பதவி இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய பால் பண்ணை கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் ஏற்படுத்த உள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. கோவை ஆவினில் லட்ச ஒழிப்பு துறை நடத்திய விசாரணையில் தவறு செய்த நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தவறுகள் யார் செய்தாலும் தண்டிக்கப்படுவர் என்றார்.  மேலும்,  ஆவின் பாலகத்தில் சிக்கன் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் எங்களின் தரத்திற்கு ஏற்றவாறு பேசினால் பேசலாம். அவர் நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்கியவர். ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்து தவறானது. அவர் தன்னை,  முன்னிலைப்படுத்தி  நானும் ரவுடி, நானும் ரவுடி, என்பது போல் கூறி வருகிறார். 

ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் தயாரிக்க சாத்தியம் குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்வின்  முடிவுக்கு பிறகு தான் ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதற்குள், சுகாதாரத்துறை அமைச்சர் ரூ.77 கோடி வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை மீது நிச்சயமாக வழக்கு தொடரப்படும். இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை. ஆவின் உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 24 லட்சம் இருந்தது. தற்போது அரசின் நடவடிக்கை காரணமாக ரூ.42 லட்சம் அதிகரித்து உள்ளது” எனக் கூறினார்.