அவர் போகும் கன்னித்தீவு இது அல்ல - அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

 
kn

இது கொளத்தூர் தொகுதியா? கன்னித் தீவு தொகுதியா? என்று கேட்கிறார் ஜெயக்குமார்.  அவர் போகும் கன்னித்தீவு இது அல்ல என்று பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் கே. என். நேரு.

k

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையினால் வடசென்னையில் திருவிக நகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று மதியம் சிக்கன் பிரியாணி வழங்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

 அப்போது  அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.  அவர்களிடம் பேசிய ஜெயக்குமார்,   அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படியே அதிமுகவினர் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வருகின்றார்கள் என்றார்.   இரண்டு நாள் பெய்த மழையையே திமுக அரசால் சரியாக கையாள முடியவில்லை.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கூட வழங்கவில்லை என்று  திமுக அரசு மீது  குற்றம் சாட்டினார்.

nn

 அவர் மேலும்,  மழை நீர் வடிகால் அமைக்கும் பணி அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.   அதனால்தான் பல இடங்களில் மழையின் நீர் வடிந்து இருக்கிறது தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவின் இயலாமை தான் மழை நீர் அதிகமான இடங்களில் தேங்கி நிற்கிறது என்றார்.தொடர்ந்து அதுகுறித்து பேசிய ஜெயக்குமார்,  கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மேற்கொண்ட நடவடிக்கை தான் திமுக அரசை தற்போது காப்பாற்றி இருக்கிறது என்றார் .

இந்நிலையில் இன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் மழைக்கால மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் கே. எம்.நேரு,  மா .சுப்பிரமணியம்,  சேகர் பாபு உள்ளிட்டோர் தொடங்கி வைத்துள்ளனர்.  அப்போது  அமைச்சர் கே. என் நேருவை சந்தித்த செய்தியாளர்கள்,  ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பிய போது,   அதிமுக ஆட்சியில் எந்த மழைநீர் வடிகால் பணிகளும் நடக்கவில்லை.  அதிமுக ஆட்சியில் பணிகள் நடைபெற்று இருந்தால் கடந்த ஆண்டு மழையின் போது பாதிப்பு ஏற்பட்டு இருக்காது என்றார்.

j

 அவர் மேலும் அது குறித்து,   அதிமுக ஆட்சியில் திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு இருந்தாலும் நிறைவேற்றப்பட்டது என்னவோ திமுக ஆட்சியில் தான்.  தனது இருப்பை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஜெயக்குமார் இப்படி பேசி வருகிறார். கொளத்தூர் தொகுதி கன்னித்தீவு தொகுதியா என்று கேட்கிறார்.  அவர் போகும் கன்னித்தீவு இது அல்ல என்று கூறினார்.