இதுக்கு நான் பதில் சொல்வேன்; ஆனா, சென்சாரில் கட்டாயிடும்- அமைச்சர் கே.என்.நேரு தடாலடி

 
ஜ்ஜ்ஜ்

சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயர் மாற்றம் செய்துள்ளது திமுக அரசு.   இதுகுறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்,   சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைப்பது மக்களுக்கு குழப்பத்தினை ஏற்படுத்தும்.    காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும்.  அந்த அளவிற்கு புகழ் பெற்ற சென்னை கிழக்குக் கடற்கரை சாலையின் பெயரை மாற்றுவதை பொதுமக்கள் கூட விரும்ப மாட்டார்கள் என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

 இதுகுறித்து திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு. கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு கே. என்.
 நேரு பதில் பேசியபோது,   இதுக்கு நான் பதில் சொல்வேன்.  ஆனால் சென்சாரில் கட்டாகிவிடும் பரவாயில்லையா? என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

 திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகள்,  பொதுப்பணித் துறையில் நடந்து வரும் பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.  நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு,  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ன்ன்

பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசியபோது,  சென்னை கிழக்கு கடற்கரை சாலையை கலைஞர் கருணாநிதி சாலை என்று மாற்றியதற்கு ஜெயக்குமார் தெரிவித்த கருத்து பற்றிய கேள்விக்கு கிழக்கு கடற்கரை சாலையை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று மாற்றுவது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என ஜெயக்குமார் சொல்லியிருக்கும் கருத்து குறித்து எ.வ.வேலு,  ‘’ நெடுஞ்சாலையை தனித்துறை ஆக்கியவர் கருணாநிதி. மண்ணும் கல்லுமாக கிடந்த சாலையை சரி செய்து அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவர் கருணாநிதி.  அந்த சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயர் வைத்திருக்கிறோம்.  இந்தப் பெயரால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது.  ஜெயக்குமாருக்கு மட்டும் தான் குழப்பம் வரும்’’ என்று சொன்னார்.

 இதே கேள்விக்கு பதில் பேச வந்த கே. என். நேரு,  ‘’ நான் இதுக்கு பதில் சொல்வேன்.  ஆனா, சென்சாரில் கட்டாகிடும் பரவாயில்லையா?’’ என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.