திமுக அறிவித்திருப்பது அனைத்துக்கட்சி கூட்டமில்லை; கூட்டணி கட்சி கூட்டம்- ஜெயக்குமார்

 
jayakumar

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்கலாமா என்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Cannot join PM Modi Cabinet as 'uninvited guest': AIADMK minister D  Jayakumar | India News,The Indian Express

ராயபுரம் , திரு.வி. க நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது பாஜக நிலைப்பாடு, நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என்பது எப்போதும் அதிமுகவின் நிலைப்பாடு. பாஜக அதிமுகவுடன் தோழமையில் இருந்தார்கள் இன்று இல்லை, நாளை இருப்பார்களா என்பதை கட்சிதான் முடிவு செய்யும். 

திமுக அறிவித்துள்ளது அனைத்து கட்சி கூட்டமில்லை,  கூட்டணி கட்சி கூட்டம்தான்.பாஜகவின் சித்தாந்தம், கொள்கை அதிமுகவிருந்து வேறானது. தேர்தல் கூட்டணி வேறு, கொள்கை வேறு. நீட்டிலிருந்து நிரந்தர விலக்கு பெற வேண்டும், அதுவரை நீட் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும், சட்ட ரீதியான போராட்டம் நடத்துவது என மூன்று முடிவுகளில் அதிமுக உறுதியாக உள்ளது.

நீட் விலக்கு தீர்மானத்திற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். திமுக , மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த 17 ஆண்டுகளில் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஏன் முயற்சிக்கவில்லை? அதிமுக வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக,  வீடுதோறும் சென்று ஜெயலலிதா மூலம் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், பள்ளி குழுந்தைகளுக்கான விலையில்லா  உபகரணங்கள், மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். தமிழகத்தில் அம்மா அலை வீசுகிறது” எனக் கூறினார்.