மைக்கை கடித்து குதறினார்..சிவி சண்முகம் ஒரு காட்டுமிராண்டி. .. அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கு

 
ப்

சிவி சண்முகம் ஒரு காட்டுமிராண்டி.  மைக்கை கடித்து குதறினார்.  வீதிகளில் பேசக்கூடியவர்கள் போல் நிரந்தரமாக நடந்து கொண்டார் என்று கடுமையாக சாடியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்.

 தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த கொன்னக்குளம் கிராமத்தில் மறைந்த  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

ச்வ்வ்

 கூட்டத்தில் அவர் பேசியபோது,    எதிர்க்கட்சியினர் தங்களுக்குள்ளே இருக்கக்கூடிய கோஷ்டி பூசல், சண்டையில் திமுக ஒருதலைபட்சமாக செயல்படுவதாக சொல்கிறார்கள்.   பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பே சிவி சண்முகம் காட்டுமிராண்டி போல மைக்கை பிடித்து மைக்கை கடித்து குதறுவதைப் போல பேசுகிறார். வீதிகளில் பேசக்கூடியவர்கள் போல் நாலாம்தரமாக நடந்துகொண்டார் என்று கடுமையாக அவரைப்பற்றி விமர்சித்தவர்,

 அவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றி கவலை  இல்லை.  மக்களை பற்றியும் கவலை இல்லை.  அவர்கள் எண்ணமெல்லாம் எப்படியாவது மீண்டும் வந்து இந்த நாட்டை கொள்ளை அடிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருக்கக்கூடிய கூடியவர்கள் என்று விமர்சித்தார்.

 அண்ணா இறந்த பிறகு திமுக காலியாகி விடும் என்று நினைத்தார்கள்.  அது எப்படி பொய்ப் பிக்கப் பட்டதோ அதே மாதிரி தான் கலைஞர்  மறைவுக்கு பிறகு திமுகவில் பிரச்சினைகள் வரும் என்று நினைத்தார்கள்.   எதிர்பார்த்த அவர்கள் ஏமாந்து விட்டார்கள் .  ஆனால், அதிமுகவில் பொதுக்குழுவைக் கூட்டி அவர்களே அடித்துக் கொள்கிறார்கள் என்று கடுமையாக சாடினார்.

பொதுக்குழுவில் சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்டோர் அடவாடியாக நடந்துகொண்டது குறித்தும், எஸ்.பி.வேலுமணியும் சண்முகவும் திமுகமீது பாய்ந்ததும்தான் பெரியகருப்பனை இந்த அளவுக்கு ஆத்திரப்பட்டு பேச வைத்திருக்கிறது.