நள்ளிரவு சந்திப்பு! ஓபிஎஸ் சென்றது உண்மையா?

 
oos

ஓபிஎஸ் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எடப்பாடி ஆதரவாளர் கே.சி.ஆணிமுத்து,  நள்ளிரவில் நீதிபதியை சந்தித்தார் ஓபிஎஸ் என்று  தெரிவித்திருக்கிறார்.

ஓபிஎஸ் அணி,  இபிஎஸ் அணி என்று அதிமுக மீண்டும் பிளவுபட்டுக் கிடக்கிறது.  அதிமுகவினர் இரு தரப்பாக பிரிந்து இருவருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை அதிமுக ஒன்றிய கழக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. 

kc

 இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில உலக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச்செயலாளர் கே.சி. ஆணிமுத்து,   எடப்பாடி பழனிச்சாமி கட்சியின்  பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று  பொதுக் குழுவில் உள்ள 98 சதவீதம் பேர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.   திருவாடானை தொகுதியிலும் எடப்பாடிக்குத் தான் ஆதரவு அதிகம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.  

 ஓபிஎஸ்ஐ ஏன் வெறுக்கிறோம் என்பதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டு இருக்கிறார்.   ஓபிஎஸ் பின்னால் குறிப்பிட்ட சமூகத்தினர்தான் இருக்கிறார்கள்.  ஆனால் எடப்பாடி சாதி ரீதியாக இல்லாமல் கட்சியை கொண்டு போவார். அதனால்தான் ஓபிஎஸ்சை வெறுக்கிறோம் என்கிறார்.  

 ஜெயலலிதா இருந்தால் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் சால்வை போடுவாரா? அப்படி போட்டு விட்டால் ஜெயலலிதா தான் சும்மா விட்டு வைப்பாரா? என்று கேட்கிறார். மேலும்,  ஓபிஎஸ்ஐ நம்பி அவருடன் யாரும் பயணிக்க முடியாது என்று சசிகலாவே சொல்கிறார்.  ஆனால் சசிகலாவுடன் இணைந்து பயணிக்கவே ஓபிஎஸ் விரும்புகிறார். சசிகலா தான் அதற்கு தயாராக இல்லை என்கிறார்.   பொதுக்குழுவில் ஒற்றை தீர்மானம் வந்து விடக்கூடாது என்பதற்காக நள்ளிரவு மூணு மணிக்கு நீதிபதியை சந்தித்தவர் ஓபிஎஸ்.   தற்போது டெல்லி பயணம் நீதிமன்றம் என்று அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறார்.  இவர் கட்சி தலைமைக்கு பண்பு இல்லாதவர்.  எடப்பாடி தான் சரியான நபர் என்கிறார்.