மெய்யநாதன் பதவியை பறித்து மகனுக்கு கொடுப்பதா? கொந்தளிக்கும் முத்தரையர்
தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார் . அமைச்சர் மெய்ய நாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் முத்தரையர் சமுதாயத்தினர் கொதித்தெழுந்துள்ளனர்.
முத்திரையர் சமுதாயத்தில் இருந்த ஒரே அமைச்சர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக நன்றாக செயல்பட்ட மெய்ய நாதனின் அவர்களின் பதவியை உதயநிதிக்கு வழங்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். கொஞ்சமாவது ரோஷம் இருந்தால் திமுகவை விட்டு விலகி வாங்க என்று முத்தரையர் சமூகத்தினர் ஆவேசப்பட, ஆம்! முத்தரையர்கள் திமுகவை விட்டு விலக வேண்டும். முத்தரையர் சமூகம் உங்களுக்கு இழிவாக தெரிகிறதா என்கிறார் சமூக ஆர்வலர் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்.
திமுக கட்சியில் இருந்த முத்தரையர் சமுதாயத்தின் ஒற்றை அமைச்சர் சிவ. வி. மையநாதன் அவர்களின் பதவியை பறித்து உதயநிதி அவர்களுக்கு கொடுத்தது எந்த விதத்தில் நியாயம் . முத்தரையர் ஓட்டு என்றால் இனிக்குது. முத்தரையர் சமுதாயம் என்றால் கசக்குதா? ஒட்டுமொத்த முத்திரையர்களின் எதிர்ப்பை திமுக சம்பாதிக்கிறது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிராக முத்தரையர் சமுதாயம் செயல்படும்.
எங்கள் முத்தரையர் சமுதாய மக்களுக்கு ஒரே அமைச்சர் மெய்யநாதன் பதவியை பறித்து மகனுக்கு வழங்கிய திமுக அரசை கவிழ்ப்போம். ஒட்டுமொத்த முத்தரையர் சமுதாய மக்கள் திரண்டு இனிமேல் திமுக தமிழ்நாட்டிற்கு வேண்டாம். எங்கள் முத்தரையர் சமுதாய மக்களுக்கு ஒரே அமைச்சர் மெய்யநாதன் பதவியை பறித்து மகனுக்கு வழங்கிய திமுக அரசை கவிழ்ப்போம் ஒட்டுமொத்த முத்தரையர் சமுதாய மக்கள் திரண்டு இனிமேல் திமுக தமிழ்நாட்டிற்கு வேண்டாம் இனிமேல் யாருமே திமுக சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்று முத்தரையர் தொடர்ந்து தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், மெய்யநாதனோ, தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட இளைஞரணிச் செயலாளர், கழகத்தின் இளைய தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார்.
https://t.co/HFhykMi3miஎங்கள் முத்தரையர் சமுதாய மக்களுக்கு ஒரே அமைச்சர் மெய்யநாதன் பதவியை பறித்து @mkstalin மகனுக்கு வழங்கிய திமுக அரசை கவிழ்ப்போம் ஒட்டுமொத்த முத்தரையர் சமுதாய மக்கள் திரண்டு இனிமேல் திமுக தமிழ்நாட்டிற்கு வேண்டாம்
— Desiya Neethi Katchi -( DNK )- தேசிய நீதி கட்சி (@desiyaneethikat) December 14, 2022