குற்றவாளிகளுக்கு ஆதரவையும், நிதியையும் அளித்து தங்களின் நலன், பிரச்சாரத்திற்கு பா.ஜ.க. பயன்படுத்துகிறது... முப்தி

 
பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

குற்றவாளிகளுக்கு ஆதரவையும், நிதியையும் அளித்து தங்களின் நலனுக்காகவும், பிரச்சாரத்திற்காகவும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது என்று மெகபூபா முப்தி குற்றம் சாட்டினார்

காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கூறியதாவது: புல்வாமா தாக்குதல் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. டேவிந்தர் சிங் விடுவிக்கப்பட்டார். தாக்குதல் எப்படி நடந்தது? இதனால் பயனடைந்தது யார்? பா.ஜ.க. குற்றவாளிகளுக்கு ஆதரவையும், நிதியையும் அளித்து தங்களின் நலனுக்காகவும், பிரச்சாரத்திற்காகவும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது. அவர்கள் (பா.ஜ.க.)  சமூகத்தில் குழப்பத்தை பரப்பவும், இந்து-முஸ்லிம் பதற்றத்தை உருவாக்கவும் விரும்புகிறார்கள். 

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்… இன்று 2ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னையா லால் (ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர்) கொல்லப்பட்ட போது, இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் எதிர்த்து சண்டையிட்டனர். யாருக்கு லாபம்? முதலில் உதய்பூர் கொலைக்காரன் மற்றும் இப்போது ரஜோரியில் பிடிபட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி இருவரும் பா.ஜ.க.வுடன் தீவிர தொடர்புகளை கொண்டுள்ளனர். பசு காவலர்களாக இருந்தாலும் சரி, தீவிவாதிகளாக இருந்தாலும் சரி தங்கள் வகுப்புவாத பிளவு மற்றும் வெறுப்பு நோக்கத்தை நிலைநிறுத்த ஆளும் கட்சி (பா.ஜ.க.) குற்றவியல் உறுப்பினர்களை பயன்படுத்துகிறது. 

பா.ஜ.க.

இந்த குற்றவாளிகளில் யாராவது எதிர்க்கட்சி தலைவருடன் தொடர்புடையவர்களாக என்று கற்பனை செய்து பாருங்கள். இப்போது பல எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளை இழிவுப்படுத்த முடிவற்ற பிரைம் டைம் இடத்தை ஒதுக்குவதன் மூலம் கோடி மீடியா அதை மழுங்கடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.