இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் நிறுத்தினார்கள், இன்று பா.ஜ.க. அதை செய்கிறது.. மெகபூபா முப்தி

 
பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் நிறுத்தினார்கள், இன்று பா.ஜ.க. அதை செய்கிறது என மெகபூபா முப்தி குற்றம் சாட்டினார்.

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில் கூறியதாவது: மதராசா என்ற வார்த்தை இருக்கும் வரை குழந்தைகளால் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என நினைக்க முடியாது. மதராசாக்களில் படித்தால் டாக்டரோ, என்ஜினீயரோ ஆக மாட்டோம் என்று சொன்னால், அவர்களே அங்கு செல்ல மறுப்பார்கள். உங்கள் குழந்தைகளுக்கு குர்ஆனை கற்றுக் கொடுங்கள், ஆனால் வீட்டில். குழந்தைகளை மதராசாக்களில் சேர்ப்பது அவர்களின் மனித உரிமை மீறலாகும். அனைத்து முஸ்லிம்களும் இந்துக்கள். இந்தியாவில் யாரும் முஸ்லிமாக பிறக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹிமாந்தா பிஸ்வா சர்மா

மதராசா தொடர்பான அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்து குறித்து மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி கூறியதாவது: முஸ்லிம்களை யார் அதிகம் தொந்தரவு செய்ய முடியும் என்பதில் முதல்வர்கள் போட்டி போடுகிறார்கள். அதனால் கோயில்கள், மசூதிகள் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. குஜராத் அல்லது உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற மற்றொரு அத்தியாயத்த செயல்படுத்த முஸ்லிம்கள் தூண்டப்படுகிறார்கள்.

பா.ஜ.க.

இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் நிறுத்தினார்கள், இன்று பா.ஜ.க. அதை செய்கிறது. பிரதமர் மோடி அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் செய்வது சரி என்று அவரது கட்சி நினைக்கிறது. இந்த நாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு இப்போது தூண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.