சிசோடியா பதவி விலகக்கோரி போராட்டம்... பா.ஜ.க.வின் பிரச்சாரத்தில் காங்கிரஸ் இணைகிறது.. மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

 
வெளிநாட்டு தூதர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை கட்சியை விட்டு நீக்கிய மெகபூபா முப்தி….

மணிஷ் சிசோடியா பதவி விலகக்கோரி காங்கிரஸ்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை குறிப்பிட்டு, அமலாக்கத்துறை தாக்குதலுக்கு தாங்களே பலியாகி இருந்தாலும், அவர்கள் (காங்கிரஸ்) பா.ஜ.க.வின் பிரச்சாரத்தில் இணைக்கிறார்கள் என்று மெகபூபா முப்தி குற்றச்சாட்டினார்.

டெல்லியின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் போில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். நேற்று காலையில்தான் சோதனை முடிவடைந்தது. டெல்லியில் மதுபான கொள்கை ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மணிஷ் சிசோடியா பதவி விலகக்கோரி டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காங்கிரஸ்

மணிஷ் சிசோடியா பதவி விலகக்கோரி காங்கிரஸ்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்கு  ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி டிவிட்டரில், ஆம் ஆத்மி ஒரு வலிமையான எதிரியாக இருப்பதால், கட்சி நலன்களுக்கு மேலம் காங்கிரஸால் உயர முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. 

பா.ஜ.க.

அமலாக்கத்துறை தாக்குதலுக்கு தாங்களே பலியாகி இருந்தாலும், அவர்கள் (காங்கிரஸ்) பா.ஜ.க.வின் பிரச்சாரத்தில் இணைக்கிறார்கள். ஏஜென்சிகள் ஆயுதம் ஏந்தியிருக்கும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டிருக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.