பாகிஸ்தான், சீனா போல் ஜம்மு அண்ட் காஷ்மீரை உலகத்துடன் இணைக்க வேண்டும்.. மத்திய அரசை வலியுறுத்திய முப்தி

 
நேற்று அப்துல்லா, இன்று மெகபூபா முப்தி: காவலில் இருக்கும் அரசியல் தலைகளை சந்திக்கும் கட்சியினர்

பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீரின் மறுபக்கத்தை இணைப்பது (சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம்) போல், மத்திய அரசு  ஜம்மு அண்ட் காஷ்மீரை உலகத்துடன் இணைக்க வேண்டும் என மெகபூபா முப்தி வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தை பாகிஸ்தானும், சீனாவும் மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்துக்கு இந்தியா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பல கோடி டாலர் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் ஈடுபடுமாறு மூன்றாம் நாடுகளை சீனாவும், பாகிஸ்தானும் கேட்டுள்ளன. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

சீனா, பாகிஸ்தான்

இந்நிலையில், இந்திய அரசியல்வாதியாக இருந்து கொண்டு, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தை ஜம்மு அண்ட் காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி பாராட்டியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மெகபூபா முப்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சார்க்கின் குருவாக இந்தியா இருக்க முடியாது என்றால், உலகத்தின் குருவாகவும் இந்தியாவால் ஆக முடியாது. 

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம்

ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய ஜம்மு அண்ட் காஷ்மீரின் இரு பகுதிகளையும் உலக அமைதி மண்டலமாக அறிவிக்க வேண்டும். மேலும் ஜம்மு அண்ட் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சார்க் ஒத்துழைப்பு மண்டலாக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீரின் மறுபக்கத்தை இணைப்பது (சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம்) போல், ஜம்மு அண்ட் காஷ்மீரை மத்திய அரசு உலகத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.