உத்தர பிரதேச அரசியலில் புதிய திருப்பம்.. சமாஜ்வாடி எம்.எல்.ஏ. ஆசம் கானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மாயாவதி

 
புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

சிறையில் இருக்கும் சமாஜ்வாடி எம்.எல்.ஏ. ஆசம் கானுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி குரல் கொடுத்துள்ளார்.
 
சமாஜ்வாடி கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவரும், ராம்பூர் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆசம் கான், ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக தற்போது சிறையில் இருக்கிறார். ஆசம் கான் மீது 89 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 88 வழக்குகளில் ஆசம் கானுக்கு பெயில் கிடைத்து விட்டது. கடைசி வழக்கிலும் பெயில் கிடைத்தால் மட்டுமே ஆசம் கானால் சிறையிலிருந்து வெளியே வர முடியும். இந்த சூழ்நிலையில், ஆசம் கானுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி குரல் கொடுத்துள்ளார்.

ஆசம் கான்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், காங்கிரஸை போல், உத்தர பிரதேசம் மற்றும் இதர பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், ஏழைகள், தலித்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் கொடுமைகளுக்கும் பயத்திற்கும் ஆளாகி துன்புறுத்தப்படும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. அதேசமயம் மற்றவர்களின் விவகாரங்களில் அவர்களின் (பா.ஜ.க.) இரக்கம் தொடர்கிறது. 

பா.ஜ.க.

இந்த வரிசையில், உத்தர பிரதேச அரசு தனது எதிரிகள் மீது தொடர்ந்து வெறுப்பு மற்றும் பயங்கரவாத (போன்ற) நடவடிக்கை எடுத்தது. மூத்த எம்.எல்.ஏ. முகமது ஆசம் கானை சுமார் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் வைத்திருக்கும் விஷயம் செய்திகளில் உள்ளது, மக்களின் கண்களில் இது நீதியை நெரிக்கும் செயல் இல்லை என்றால் அப்புறம் என்ன? என பதிவு செய்துள்ளார்.