குடியரசு தலைவராக வேண்டும் என நான் கனவு காண மாட்டேன்.. சமாஜ்வாடி தலைவருக்கு பதிலடி கொடுத்த மாயாவதி

 
புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

குடியரசு தலைவராக வேண்டும் என்று நான் கனவு காண மாட்டேன் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மாயாவதி பதிலடி கொடுத்தார்.

உத்தர பிரதேசம் மெயின்பூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், அண்மையில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனது வாக்காளர்களை பா.ஜ.க.வுக்கு மாற்றியது. அதற்கு கை மாறாக பா.ஜ.க., மாயாவதியை நாட்டின் குடியரசு தலைவராக ஆக்குகிறதா என்பதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுக்கு மாயாவதி பதில் கொடுத்துள்ளார்.

பா.ஜ.க.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: சமாஜ்வாடி கட்சி என்னை குடியரசு தலைவராக்கும் அதன் கனவுகளை மறந்து விட வேண்டும், அதனால் உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வருவதற்கான வழி தெளிவாக உள்ளது. நான் குடியரசு தலைவராக வேண்டும் என்று கனவு காண மாட்டேன், ஏனென்றால் நான் நிம்மதியான வாழ்க்கையை விரும்பவில்லை, ஆனால் போராட்டத்தை விரும்புகிறேன்.

அகிலேஷ் யாதவ்

நான் கனவு காண்கிறேன், மீண்டும் உத்தர பிரதேச முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் பதவியேற்க. எங்கள் ஆட்சிக் காலத்தில்  செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள், சமாஜ்வாடி மற்றும் பா.ஜ.க. அரசுகளால் புறக்கணிக்கப்பட்டன. இது குறித்து மாநில அரசின் கவனத்தை ஈர்க்க, எஸ்.சி. மிஸ்ரா தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதிநிதிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜியை சந்திக்க சென்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.