குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு.. மாயாவதி அறிவிப்பால் எதிர்கட்சிகள் ஷாக்

 
புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

எதிர்வரும் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என மாயாவதி அறிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. குடியரசு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிருகிறார். பழங்குடி பெண்ணான திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

திரௌபதி முர்மு

இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவியும், உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆதிவாதி சமாஜ் கட்சியின் இயக்கத்தின் முக்கிய அங்கம் என்பதை மனதில் கொண்டு வரும் குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பா.ஜ.க. அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக எடுக்கப்படவில்லை. 

வெங்கையா நாயுடு சொன்னதை மோடி அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.. பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்..

ஆனால் திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆதிவாசி பெண்ணை நாட்டின் குடியரசு தலைவராக்க எங்கள் கட்சியையும், அதன் இயக்கத்தையும் மனதில் வைத்து எடுக்கப்பட்டது. குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக எனது கட்சியால் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளித்து இருப்பது எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.