மக்கள்தொகை கட்டுப்பாடு போன்ற நீண்டகால பிரச்சினைகளால் மக்களை பா.ஜ.க. குழப்புகிறது.. மாயாவதி குற்றச்சாட்டு

 
புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

மக்கள்தொகை கட்டுப்பாடு போன்ற நீண்டகால பிரச்சினைகளால் மக்களை பா.ஜ.க. குழப்புகிறது என்று மாயாவதி குற்றம் சாட்டினார்.

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமையன்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டில் மக்கள் தொகை சமநிலையின்மை அராஜகத்திற்கு வழிவகுக்கும். மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டங்கள் சமநிலையின்மைக்கு வழிவகுக்கக் கூடாது என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மக்கள்தொகை கட்டுப்பாடு போன்ற நீண்டகால பிரச்சினைகளால் மக்களை பா.ஜ.க. குழப்புகிறது என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

யோகி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்களில், மக்கள் தங்கள் தேவைகளை மட்டுப்படுத்தி, கடுமையான வறுமை மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தால் மன அழுத்தமான வாழ்க்கையை நடத்திய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த நேரத்தில், மக்கள்தொகை கட்டுப்பாடு போன்ற நீண்டகால பிரச்சினைகளால் மக்களை குழப்புவது பா.ஜ.க.வின்  புத்திசாலித்தனமா?.

 மக்கள்தொகை

மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது நீண்ட கால கொள்கை பிரச்சினையாகும். இதற்கு சட்டத்தை விட அதிக விழிப்புணர்வு தேவை, ஆனால் நாட்டின் உண்மையான முன்னுரிமையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பா.ஜ.க. அரசாங்கங்கள் வஞ்சகமான மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தேர்ந்தெடுக்கின்றன. இவ்வாறான நிலையில் எவ்வாறு சிறந்த மக்கள் நலன், நாட்டின் நலன் சாத்தியமாகும் என பதிவு செய்துள்ளார்.