அம்பேத்கரின் நோக்கம் நிறைவேறாமல் இருப்பதற்கு காங்கிரஸூம், பா.ஜ.க.வும் தான் காரணம்.. மாயாவதி குற்றச்சாட்டு

 
காங்கிரஸ் - பாஜக

அம்பேத்கரின் நோக்கம் நிறைவேறாமல் இருப்பதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் தவறான நோக்கங்கள்தான் காரணம் என மாயாவதி குற்றம் சாட்டினார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜாதிவெறிக் கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலித் ஒருவரை எம்.பி., எம்.எல்.ஏ., துணை முதல்வர் அல்லது குடியரசு தலைவராக்கினாலும், அந்த தலித் நபரால் அவரது மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னேற்றத்தை மட்டுமே உறுதி செய்யும் ஆனால் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்ய முடியாது என்பது நாட்டு அரசியலில் எப்போதும் தெளிவாக உள்ளது. தலித் சமூகத்திற்கு ஏதாவது இவர்கள் முயற்சி செய்தால் கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த தலித் தலைவர்கள இந்த கட்சிகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும். 

அம்பேத்கர்

அம்பேத்கரின் இலட்சியங்களையும், போராட்டங்களையும் எப்போதும் புறக்கணித்து வரும் இந்த கட்சிகள் தூய்மையான அரசியல் சுயநலத்திற்காக அவருக்கு அஞ்சலி செலுத்த போட்டியிடுகின்றன. இது வஞ்சகம் தவிர வேறில்லை. ஏனென்றால் அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் உதவியற்றவர்களாகவும், அடிமைகளாகவும் இருப்பதை உறுதி செய்யும் கொள்கைகளில் இவர்கள் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். காங்கிரஸூக்கு பிறகு, இந்த திசையில் பா.ஜ.க. முன்னணியில் இருப்பதை காணலாம். இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீதான சுரண்டலோ, கொடுமைகளோ நிற்கவில்லை. அவர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலையும் மேம்படவில்லை. 

எந்த தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கன்னு என் கட்சி சொல்லவே இல்லை… மாயாவதி

நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் சூழலை உறுதி செய்ய அம்பேத்கர் அரசியல் சாதனத்தில் பல விதிகளை வகுத்தார். அது ஏற்றத்தாழ்வை குறைக்கும்.  ஆனால் இந்த விதிகள் செயல்படுத்தப்படவில்லை. இது இந்த அரசியல் கட்சிகளின் தவறான நோக்கங்களை காட்டுகிறது. அம்பேத்கரின் நோக்கம் நிறைவேறாமல் இருப்பதற்கு இதுவே காரணம். பி.ஆர். அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற, மக்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களை மற்றும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனது கட்சியின் இயக்கத்தில் இணையுங்க. இல்லையேல் போட்டி கட்சிகள் பணம் உள்பட எல்லா வழிகளையும் பயன்படுத்தி இந்த இயக்கத்தை தடுத்து நிறுத்துவார்கள். போட்டி கட்சிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டாலும், நம் இயக்கத்துக்கு எதிராக ஒன்றாக மாறுகின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.