பீதியில் எடப்பாடி! விசாரணைக்கு ஆஜரான மருது அழகுராஜ் - வெளிவரப்போகும் உண்மைகள்..

 
மருது

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறார் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ்.

ஒற்றைத்தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் எழுந்ததை அடுத்து  நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.  பொறுப்பில் இருந்து விலகியதுமே அவர் கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  

ம்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மறு விசாரணை நடந்து வருகிறது.  இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சசிகலா உள்பட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.   ஒற்றைத்தலைமை விவகாரம் எழுந்து ஓபிஎஸ்சை ஓரங்கட்டியதுமே மருது அழகுராஜ், டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் மகன் விப ஜெயபிரதீப் உள்ளிட்டோர் கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருக்கிறது என்று திமுகவினர் மறைமுகமாக குற்றம்சாட்டி வரும் நிலையில்,  ஓபிஎஸ் தரப்பினர் கொடுக்கும் அழுத்தம் எடப்பாடி மீதான சந்தேகத்தை வலுப்படுத்தி வருகிறது.

கொடநாடு வழக்கில்   உண்மை குற்றவாளி யார்? என்பது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் தெரியும் என்றார் மருது அழகுராஜ்.  கொடநாடு வழக்கை பற்றி பேசும்போதெல்லாம் முன்னாள் அமைச்சர்கள், அண்ணே.. உங்களுக்கு தெரியாதா என்ன..அத விடுங்க.. என்று சொல்லிவிடுவார்கள்.  அப்படி என்றால் அவர்களுக்கு தெரியும்தானே? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.  தொடர்ந்து,  கொடநாடு வழக்கில் கவிதை வடிவில் முதல்வருக்கு  கோரிக்கை வைத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

கொ

கொடநாடு திரில்லரும் சீரியல் கில்லரும்...

கூவத்தூர் தேர்வு
நடந்து
கோட்டையில்
ஆட்சியில் அமர்ந்து
மாதம் சில கடக்க
மகராசி அம்மா
குடியிருந்த கோவிலாம்
கோடநாடு எஸ்டேட்டில்
கொலை கொள்ளை நடந்தது...
அதில்
ஓம்பகதூர் என்கிற நேபாளத்து காவலாளி
கொலையாகிக் கிடக்க
கிருஷ்ண பகதூர் என்னும் நேபாளி
குத்துயிரோடு தப்பித்திருக்க...

ஒரு குதிரை பொம்மை
இரு கடிகாரங்கள் மட்டும் களவு
போனதாக கதையொன்று பிறக்க...
சட்டைப்பையில் அம்மா படம் வைத்து
சதா இதய தெய்வம் என்று
சரணகோஷம் பாடும்
முதலமைச்சர் தொடங்கி
அமைச்சர்கள்
வரை

கொலை நடந்த
கொடநாட்டிற்கு
பதறி ஓடவில்லை
அவர்களிடம்
பதைபதைப்பு ஏதுமில்லை.
இந்த சதுரங்க வேட்டையின் ஏற்பாட்டு நாயகன்
என்பதாக
சந்தேகிக்கப் படுபவரான
சஞ்சீவனுக்கு
அடுத்த சில நாட்களில்
மாநில வர்த்தக அணி செயலாளர்
எனும் மகுடம்
சூட்டப்படவே...
ஐயங்கள்
பிறந்தன...

கொ

ஆங்காங்கே மௌனமாய்
அலசல்கள் எழுந்தன.
தப்பிப்போன கிருஷ்ணபகதூரை 
நேபாளம் சென்று அழைத்து வந்தாலே
நடந்தது என்ன
என்பதெல்லாம் நாட்டுக்கு தெரிந்துவிடும் என்ற நிலையில்
அது நடக்காமல் போனது...
ஆனால் அடுத்த சில நாளில்
கொலை கொள்ளைகள் தொடர்பு என சந்தேகத்துக்கு உள்ளான
அம்மாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ்
சேலம் அருகே மர்மமான விபத்து ஒன்றில்
கொல்லப்பட்டார்...

க்க்

அதே நாளில்
கேரளாவிற்கு தப்பிப்போன இன்னொரு
குற்றவாளியும் மர்மமான விபத்தில் சிக்க
அவரது மனைவியும் மகனும்
மரணித்து விட...

அடுத்த சில நாளில்
கொடநாடு பங்களாவில்
பணிசெய்த தினேஷ் என்பவரும் மர்மமான முறையில் தற்கொலை
செய்து கொள்ள...

ஒரு குதிரை பொம்மை
இரண்டு கடிகாரம்
இதற்காக
ஐந்து உயிர்கள்
பரலோக பயணங்களா..?
என்று பற்றியது நெருப்பு
ஆனாலும்
அம்மா அம்மா என
வார்த்தைக்கு வார்த்தை அல்லேலூயா பாடும்
அமைச்சர் முதல் முதலமைச்சர்
வரை
கொடநாடு கொலைகுறித்து ஒரு வார்த்தை பேசவில்லை.
கூடவே
வழக்கைவிரைந்து முடித்து
உண்மையை ஆழக்குழி
தோண்டி புதைக்க
காவல்துறை துணையோடு
கட்டளைகள் பறப்பதை
உணரமுடிந்தது

ஆனால்...
கொரோனா தயவில்
கொடநாடு கொலைவழக்கு வேகம்
குறைந்தது...

விரைந்து முடித்துவிட வேண்டும்
என்பவரது வெறித்தனத்தில்
இடியும் விழுந்தது.
பிறகென்ன
தேர்தல் முடிந்தது
திமுக ஆட்சிக்கு வந்தது

ஓ

வாக்குறுதி தந்தது போலவே
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில்
புதுவேகம் பிறந்தது...
புதைக்க முற்பட்ட உண்மை
கள் பலவும்
புற்றீசலாய் பிறந்தது.
குற்றத்தின் சூத்திரதாரியை
கொலை
கொள்ளை நடத்திய
கொடும்
பாதகனை
நெருங்கும் நேரத்தில்
நியூஸ் 18 தொலைக்காட்சி
பரபரப்பு செய்தி
ஒன்றை
அம்பலத்தில் கொண்டு வந்து அதிர்ச்சி தந்திருக்கிறது .
அது கொடநாடு கொலைவழக்கு தொடர்புடைய குற்றவாளிகளை
சந்தித்து பேரம் பேசிய பிரதான நிகழ்வை
பின்தொடர்ந்தது விசாரித்ததில் அந்த
குற்றவாளிகள் கைகாட்டுவது
இளங்கோவன் என்கிற அஇஅதிமுக அதிமுக்கிய பிரமுகரை என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி...

அதுசரி...
இவருக்கு தானே எடப்பாடி பன்னெடுங்காலமாக தன்வசம்
வைத்திருந்த
சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை சமீபத்தில்
தரைப்பாடி
கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி சரி
இப்ப முடிவுக்கு வரலாம்.

ச்ட்

*மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே
பதினெட்டு
வருடத்தில்
ஒருவரிகூட உங்களை நான் பாராட்டி எழுதியதில்லை
தயவுகூர்ந்து கண்முன்னே நிழலாடும்
களவாணியை
ஒரு முன்னாள் முதல்வர்
வீட்டைக் கொள்ளையடித்து
காவலாளி தொடங்கி கார் ஓட்டுநர் வரை
ஐந்து உயிர்களை பலி பீடம் ஏற்றிய
அந்த அரக்கனை சீக்கிரமாய்
பிடித்து சிறையில்
அடையுங்கள்.
உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.

புரட்சித் தலைவியை உயிராக
நேசிக்கின்ற
தொண்டர்களின்
போற்றுதலும்
உங்களை வந்து சேரும்
அன்போடு
வேண்டும்...
கழகத்
தொண்டன்...”

இந்த நிலையில், கொடநாடு விசாரணைக்கு மருது அழகுராஜ் ஆஜராவதால்,  விசாரணையில் அவர் பல உண்மைகளை சொல்ல வாய்ப்பிருக்கிறது என்பதால் எடப்பாடியும் அவரது தரப்பும் பீதியில் இருப்பதாக தகவல் பரவுகிறது ‘இபிஎஸ் அதிமுக’ வட்டாரத்தில்.