அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாரா ஈபிஎஸ்! தஞ்சையில் பரபரப்பு பேனர்

 
ep

தஞ்சையில் நாளை  நடைபெற உள்ள  அ.தி.மு.க ஓ.பி.எஸ் ஆதரவாளர் இல்ல திருமண விழாவையொட்டி  வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நடைபெறும் உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மாறி மாறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் நாள்தோறும் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பக்கம் அதிமுக நிர்வாகிகள் வந்துகொண்டுள்ளனர். இதனிடையே ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதனை ஈபிஎஸ் ஏற்க மறுத்துவிட்டார். 

இந்நிலையில் தஞ்சையில் நாளை  நடைபெற உள்ள  அ.தி.மு.க ஓ.பி.எஸ் ஆதரவாளர் இல்ல திருமண விழாவையொட்டி  வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில், இரு மனம் இணையும் விழாவில் கூட்டுத் தலைமைகளே  வருக  அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ்,  துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,  சசிகலா, தினகரன் ஆகியோரின் படத்துடன்  கூட்டுத் தலைமைகளே  வருக வருக என வரவேற்றுள்ளனர். அந்த பிளக்ஸில் சசிகலா, டிடிவி தினகரன், வைத்திலிங்கம், ஓபிஎஸ் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.