புதிய இந்தியாவில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது... மார்கரெட் ஆல்வா குற்றச்சாட்டு

 
தொலைப்பேசி ஒட்டுகேட்பு

[0:53 pm, 26/07/2022] Gps: புதிய இந்தியாவில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மத்திய அரசு மீது மார்கரெட் ஆல்வா மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

புதிய துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட்  6ஆம் தேதி நடைபெற உள்ளது. துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தங்கர் போட்டியிடுகிறார். அதேவேளையில் எதிர்கட்சிகளின்  பொது  வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார். இந்நிலையில், புதிய இந்தியாவில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மார்கரெட் ஆல்வா மத்திய அரசை மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

மார்கரெட் ஆல்வா 

துணை குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வா டிவிட்டரில், பிக் பிரதர் எப்பொழுதும் பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறார் என்ற பயம். புதிய இந்தியாவில் கட்சி எல்லைகளுக்கு அப்பால் அரசியல்வாதிகளுக்கு இடையேயான அனைத்து உரையாடல்களிலும் ஊடுருவுகிறது. எம்.பி.க்களும், கட்சி தலைவர்களும் தங்களுடன் பல தொலைபேசிகளை எடுத்து செல்கின்றனர், அடிக்கடி எண்களை மாற்றிக் கொள்கிறார்கள், அவர்கள் சந்திக்கும்போது  குசுகுசுவெனப் பேசுவார்கள். பயம் ஜனநாயகத்தை கொன்று விடுகிறது என பதிவு செய்துள்ளார்.

பிரகலாத் ஜோஷி

மார்கரெட் ஆல்வாவின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், குழந்தைத்தனமான குற்றச்சாட்டுக்கள். அவரது போனை ஏன் யாரும் ஒட்டு கேட்க வேண்டும்? அவள் யாருடனும் பேசட்டுமட். குடியரசு துணை தலைவர் முடிவுகள் குறித்து நாங்கள் உறுதியாக உள்ளோம் என தெரிவித்தார். மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டெனி கூறுகையில், மனச்சோர்வடைந்தவர்கள் அப்படி பேசுகிறார்கள். அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மக்கள் மனச்சோர்வினால் இதுபோன்ற அறிக்கைகளை வழங்குகிறார்கள் என தெரிவித்தார்.