நான் யாருக்கும் பயப்பட போவதில்லை... எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா

 
மார்கரெட் ஆல்வா 

நான் யாருக்கும் பயப்பட போவதில்லை என்று குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா தெரிவித்தார்.

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய இந்திய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட்  6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19 (இன்று)  கடைசி நாளாகும்.  குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜகதீப் தங்கர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். எதிர்கட்சிகளின்  பொது  வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

அதிகாரியிடமிருந்து ஆவணங்களை பெறும் பிரதமர் மோடி

இந்நிலையில் மார்கரெட் ஆல்வா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ஜகதீப் தங்கருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சாரத்தை எதிர்த்து போராடுவேன். நான் யாருக்கும் பயப்பட போவதில்லை. இது கடினமான போர் என்று எனக்கு தெரியும். அரசியலில் வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல, போட்டியிடுவதுதான் விஷயம். என் மீது நம்பிக்கை வைத்துள்ள எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில், குடியரசு துணை தலைவருக்கு மார்கரெட் ஆல்வா தகுதியான வேட்பாளர் மற்றும் பல்வேறு திறன்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த தலைவர். நாங்கள் அவருக்கு ஒருமித்த ஆதரவு அளிக்கிறோம். 18 கட்சிகள் அவருக்கு ஆதரவளிக்கின்றன என தெரிவித்தார்.