மாபாவின் அணி தாவல் - வைரலாகும் போஸ்டர்

 
ma

தொழிலதிபர் மாபா  பாண்டியராஜன் பாஜகவில் சேர்ந்து அக்கட்சியில் இயங்கி வந்தவர்,  தேமுதிகவில் இணைந்து எம்.எல்.ஏ ஆனார்.   ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்து அமைச்சரானார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா அணி - ஓபிஎஸ் அணி என்று அதிமுக இரண்டாக உடைந்தபோது,  ஓபிஎஸ் பக்கம் நின்றார் மாபா.

e

தர்மயுத்தம் தொடங்கியது முதல் ஓ. பன்னீர்செல்வத்தின் உடன் இருந்த அவரின் தீவிர ஆதரவாளர்  முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.  அதிமுகவின் தோல்விக்கு பின்னர் ஆவடி தொகுதியில் மீண்டும் தோல்வி அடைந்த மாமா, தீவிர அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் தனது தொழிலை முழுநேரமாக எடுத்து செய்து வந்தார்.  

 தற்போது அதிமுகவில் எடப்பாடி அணி - ஓபிஎஸ் அணி என்று அதிமுகவில் மீண்டும்  கோஷ்டி பூசல் ஏற்பட்டிருக்கும் நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார் மாபா.

 தர்மயுத்தம் தொடங்கியது முதல் பன்னீர்செல்வத்திடம் உறுதுணையாக நின்ற அவரின் தீவிர ஆதரவாளர் மாபா,  எடப்பாடி பக்கம் போய் இருப்பது  ஓபிஎஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   கே.பி.முனுசாமி உள்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக எடப்பாடி பக்கம்  சாய்ந்து வந்த நிலையில் மாபாவும் ஓபிஎஸ் பக்கம் சென்றது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து, மாபா பாண்டியராஜன் ’கடந்து வந்து பாதை’ என்று  வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில், ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் என்பவர் பதிவிட்ட போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.