டெல்லியை பற்றி கவலைப்படாவிட்டால், பஞ்சாப் சென்று முதல்வராகுங்க..கெஜ்ரிவாலை தாக்கிய மனோஜ் திவாரி..

 
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியை பற்றி கவலைப்படாவிட்டால், பஞ்சாப் சென்று முதல்வராகுங்க என்று அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி கடுமையாக தாக்கினார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 27 ஆண்டுகளாக அம்மாநிலத்தில் ஆட்சி செய்து பா.ஜ.க. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி கனியை (பெரும்பான்மை இடங்களை கைப்பற்றுவது) அவ்வளவு எளிதாக இருக்காது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனை உறுதி செய்வது போல் ஆம் ஆத்மி கட்சி அங்கு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

பா.ஜ.க.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் உள்ளிட்டோர் அடிக்கடி குஜராத் சென்று அங்கு ஆம் ஆத்மிக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றுடன் கூட குஜராத் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் டெல்லியில் அதிகரிதது மாசுவை கட்டுப்படுத்தாமல் குஜராத் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்வதை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

மனோஜ் திவாரியை கழட்டி விட்ட பா.ஜ.க…. டெல்லி பா.ஜ.க.வின் புதிய தலைவர் ஆதேஷ் குமார் குப்தா…

பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி இது தொடர்பாக கூறுகையில், மாசு அதிகரித்து வருவதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாத் பூஜைக்கு தயாராக டெல்லியில் தங்கியிருக்க வேண்டும். ஆனால மாறாக இங்கு பக்தர்களுக்கு வசதி செய்ய விரும்பாததால், குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். டெல்லியை பற்றி கவலைப்படாவிட்டால், அவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) பஞ்சாப் சென்று அம்மாநில முதல்வராக வேண்டும் என தெரிவித்தார்.