"யார போத்து ஊமைனு சொன்னீங்க?" - பொறுத்தது போதும் என பொங்கிய மன்மோகன் சிங்!

 
மன்மோகன் சிங்

பொறுமையின் சிகரம் என்றால் அது நம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான். அவர் எந்த அளவிற்கு அமைதியாக இருக்கிறாரோ அந்தளவிற்கு அறிவிற் சிறந்த அறிஞரும் ஆவார். பொருளாதாரத்தில் ஆழ்ந்த விஷய ஞானம் தெரிந்தவர். அவர் ஆட்சிக் காலத்தில் தான் இந்திய பொருளாதாரம் மிகப்பெரும் வளர்ச்சி கண்டது. பிரதமர் நாற்காலியிலிருந்து இறங்கியும் அவர் வாயை அசைப்பதில்லை. வயது முதிர்ச்சி கூட ஒரு காரணமாக இருக்கலாம். அண்மையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். ஆனால் அவர் மோடி பிரதமராவதற்கு முன்பு சொன்ன ஒரு வார்த்தை தான் இப்போதும் பிரபலம்.

Does Narendra Modi regret accusing Manmohan Singh of treason?

Modi as PM will be a disaster for india என்ற வார்த்தையை நெட்டிசன்கள் அவ்வப்போது பகிர்ந்து அப்போதே மன்மோகன் சிங் மோடியை கணித்திருக்கிறார் என புகழ் பாடுவார்கள். இதற்காகவாது அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து வருகிறார் மன்மோகன் சிங். தற்போது பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா என்பது போல சரமாரியாக விமர்சித்திருக்கிறார் மன்மோகன் சிங். மத்திய அரசை விமர்சித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Narendra Modi: One hug at a time! PM Narendra Modi's taking over the world  with his embrace

அதில், "நாட்டில் பண வீக்கத்தாலும் வேலைவாய்ப்பின்மையாலும்  அவதிப்படுகின்றனர். 7 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு தனது தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ள தயாராகவில்லை. மாறாக எல்லா பிரச்சினைகளுக்கு முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை காரணம் கூறுகிறது. பிரதமரின் பதவிக்கென தனிச்சிறப்பு இருக்கிறது. கண்ணியத்தை உணர்ந்து அவர் நடக்க வேண்டும். வரலாற்றில் பிழை கண்டுபிடித்து பழி போடுவதை நிறுத்த வேண்டும். நான் பிரதமராக இருந்தபோது எப்போதும் இந்த தேசத்தின் கௌரவத்தை எங்கும் விட்டுக் கொடுத்ததில்லை.

Manmohan Singh in hospital, PM Modi prays for his 'good health, speedy  recovery' | India News,The Indian Express

பாஜக அரசுக்குப் பொருளாதார கொள்கை குறித்து எந்த புரிதலும் இல்லை. வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியடைந்துவிட்டது. எல்லைக்குள் ஊடுருவும் சீனாவைக் கட்டுப்படுத்தாமல், அதுகுறித்த செய்தியை கட்டுப்படுத்துகிறது. வெளியுறவுக் கொள்கையை பிற நாட்டுத் தலைவர்களை வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடிப்பதாலும், பிரியாணி சமைத்துக் கொடுப்பதாலும், ஊஞ்சலில் ஒன்றாக ஆடுவதாலும் மட்டும் கட்டமைக்க முடியாது. இந்த அரசு பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறது. ங்கள் எப்போதும் நாட்டைப் பிரித்ததில்லை. 


நாட்டின் மாண்பையோ அல்லது பிரதமரின் பதவிக்கான கண்ணியத்தையோ குறைவாக எண்ணியதில்லை. ஆனால் இன்று மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. பிரிட்டிஷார் இந்தியா மீது கையாண்ட  பின்பற்றிய பிரித்தாளும் கொள்கைக்கு சமமானது. அரசியல் சாசன அமைப்புகள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டுள்ளன. பொருளாதாரக் கொள்கைகளில் சுயநலமும், பேராசையும்தான் மிகுந்து நிற்கிறது. பாஜக, என்னை எப்போதுமே வலுவற்றவன், ஊமையாக இருப்பவன், ஊழல்வாதி என்று விமர்சித்தது. ஆனால், இன்று பாஜக, அதன் பி, சி டீம்கள் எல்லாம் நாட்டு மக்கள் முன்னால் சுயரூபம் தென்பட அம்பலமாகி நிற்கிறது” என்றார்.