பா.ஜ.க.வினருக்கு அமித் ஷா, நரேந்திர மோடி மட்டுமே குடும்பம், தங்கள் குடும்பத்தை விட அவர்களை மதிக்கிறார்கள்.. மனிஷா தாக்கு

 
மனிஷா கயண்டே

பா.ஜ.க.வினருக்கு அமித் ஷா, நரேந்திர மோடி மட்டுமே குடும்பம்,  தங்கள் குடும்பத்தை விட அவர்களை மதிக்கிறார்கள் என்று உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா தலைவர் மனிஷா கயண்டே தாக்கியுள்ளார்.

உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷா கயண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், என் தாய், தந்தையை துஷ்பிரயோகம் செய்யுங்கள் ஆனால் மோடி மற்றும் அமித் ஷாவை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் என்று கூறினார். இப்போது சொல்லுங்கள், ஒருவரின் குடும்பத்தை துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்க்பபடுவது நமது கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா?. 

சந்திரகாந்த் பாட்டீல்

பா.ஜ.க.வை பொறுத்தவரை, அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி மட்டுமே குடும்பம், அவர்கள் (பா.ஜ.க.வினர்) தங்கள் குடும்பத்தை விட அவர்களை மதிக்கிறார்கள். யாரோ (பா.ஜ.க.) சொன்னதால் கோஷ்டி (ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள்) கட்சியை விட்டு வெளியேறியது. ஆனால் அதற்காக கட்சி முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல. அவர்கள் (ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள்)  ஒரு குழு, கட்சி அல்ல. எனவே அவர்களுக்கு சின்னத்தின் மீது எந்த உரிமையும் இல்லை. 

ஏக்நாத் ஷிண்டே

நாங்கள் கடந்த 56 ஆண்டுகளாக கட்சியாக இருக்கிறோம், உத்தவ் தாக்கரே எங்கள் கட்சியின் தலைவர். அவர் பல ஆண்டுகளாக எங்களை வழிநடத்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் சிவ சேனா கட்சி தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு  பிரிவு, உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு பிரிவு என இரண்டு பிரிவுகளாக உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவ சேனாவின் வில் அம்பு சின்னத்தை பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.