நான் குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல விடாமல் தடுப்பதே அவர்களின் நோக்கம்... பா.ஜ.க.வை குற்றம் சாட்டிய சிசோடியா

 
டெல்லியில் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை- துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தன்னை  சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்ததை குறிப்பிட்டு,  நான் குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல விடாமல் தடுப்பதே அவர்களின் நோக்கம் என்று பா.ஜ.க.வை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டினார்.

டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அக்டோபர் 17ம் தேதியன்று (நேற்று) சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி, டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிஷ் சிசோடியோவுக்கு சி.பி.ஐ. சில தினங்களுக்கு முன் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து மணிஷ் சிசோடியா விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். முன்னதாக நேற்று காலையில் மணிஷ் சிசோடியா டிவிட்டரில் தொடர்ச்சியாக டிவிட்டுகளில், என் மீது முழுக்க முழுக்க பொய் வழக்கு போட்டு கைது செய்ய தயாராகி வருகின்றனர். வரும் நாட்களில் தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் செல்ல இருந்தேன். இவர்கள் குஜராத்தை மோசமாக இழக்கிறார்கள். 

சி.பி.ஐ.

நான் குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல விடாமல் தடுப்பதே அவர்களின் நோக்கம். நான் குஜராத்துக்கு சென்றபோது, குஜராத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு டெல்லி போன்று அற்புதமான பள்ளிகளை உருவாக்குவோம் என்று குஜராத் மக்களிடம் கூறினேன். மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் குஜராத்தில் நல்ல பள்ளிகள் கட்டப்படுவதை இவர்கள் (பா.ஜ.க.) விரும்பவில்லை, குஜராத் மக்களும் படித்து முன்னேற வேண்டும். ஆனால் நான் சிறை செல்வது குஜராத் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தாது. 

பா.ஜ.க.

இன்று ஒவ்வொரு குஜராத்தியும் எழுந்து நிற்கிறார்கள். குஜராத்தின் ஒவ்வொரு குழந்தையும் இப்போது நல்ல பள்ளிகள், மருத்துவமனைகள், வேலைகள், மின்சாரம் ஆகியவற்றுக்காக பிரச்சாரம் செய்கின்றனர். குஜராத்தில் வரும் தேர்தல் ஒரு இயக்கமாக இருக்கும். என் மீது முற்றிலும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்கள் என் வீட்டில் சோதனை செய்து எதுவும் கிடைக்கவில்லை, எனது அனைத்து வங்கி லாக்கர்களிலும் தேடினார்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனது கிராமத்துக்கு சென்று எல்லாவற்றையும் சோதித்தார்கள், எதுவும் கிடைக்கவில்லை. இந்த வழக்கு முற்றிலும் போலியானது என பதிவு செய்துள்ளார்.