நண்பர் தவறு செய்தால் திருத்த வேண்டும்.. ரஷ்யா விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்த மணிஷ் திவாரி

 
ராஜீவ் காந்தி அறக்கட்டளை மீது விசாரணை.. அரசு எவ்வளவு கீழ்தரமாக செல்லும் என்பதற்கு உதாரணம்.. மனிஷ் திவாரி

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக் எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காதற்கு மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேசமயம், சீனா, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. ரஷ்யா மிகவும் நட்பு நாடு என்பதால் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை.

ரஷ்யா-உக்ரைன் போர்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காதற்கு மத்திய அரசை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான மணிஷ் திவாரி இது தொடர்பாக கூறியிருப்பதாவது: இந்தியாவின் அணிசேரா இயக்கத்தின் கொள்கை 1991 முதல் படிப்படியாக முடிவுக்கு வந்தது. இன்று அதே கொள்கையில் இந்தியா திரும்ப நினைத்தால் அது தவறு.

மத்திய அரசு

ரஷ்யா நம்முடைய கஷ்டங்களில் நமக்கு ஆதரவாக நின்றது. ஆனால் ஒரு நண்பர் தவறு செய்தால், நாம் அவர்களை திருத்த வேண்டும்.. ஒரு புறம் ஜனநாயக நாடுகள் மற்றும் சர்வாதிகார வழியை ஆதரிக்கும் நாடுகள் ஒரு புதிய இரும்புத்திரையுடன் உலகை முன்வைக்கிறது. இந்தியா தன் பக்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.