ஜெய் ராம் தாக்கூரை மாற்றி விட்டு அனுராக் தாக்கூரை இமாச்சல பிரசதேச முதல்வராக்க பா.ஜ.க. விருப்பம்.. ஆம் ஆத்மி தகவல்

 
ஜெய் ராம் தாக்கூர், அனுராக் தாக்கூர்

இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய் ராம் தாக்கூரை நீக்கி விட்டு அனுராக் தாக்கூரை  முதல்வராக்க பா.ஜ.க. விரும்புகிறது என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஜெய் ராம் தாக்கூரை மாற்றி விட்டு அனுராக் தாக்கூரை இமாச்சல பிரசதேச முதல்வராக்க பா.ஜ.க. விரும்புகிறது என ஆம் ஆத்மி கட்சி பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. 

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஜெய் ராம் தாக்கூரை மாற்றி விட்டு அனுராக் தாக்கூரை இமாச்சல பிரசதேச முதல்வராக்க பா.ஜ.க. விரும்புகிறது. பா.ஜ.க.வினர் தங்களது தோல்விகளை நினைவு கூர்ந்துள்ளனர். முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. முகத்தை (முதல்வரை) மாற்றும்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக, மக்களின் நம்பிக்கைகள் உடைந்து விட்டன. இப்போது பா.ஜ.க.வை மக்கள் நினைவில் கொள்ளப்போவதில்லை. மக்கள் இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த புதன்கிழமையன்று இமாச்சல பிரதேசத்தில் மான்டியில் ஆம் ஆத்மி சார்பில் நடைபெற்ற பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவாலும், பகவந்த் மானும் கலந்து கொண்டனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், முதலில் டெல்லியில் ஊழலை ஒழித்தோம். பிறகு பஞ்சாபில் ஊழலை ஒழித்தோம். இப்போது இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஊழலை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று தெரிவித்தார்.