தங்கள் குண்டர்களில் ஒருவரை காப்பாற்ற முழு பா.ஜ.க.வும், அவர்களின் அரசாங்கங்களும் ஈடுபட்டுள்ளன... மணீஷ் சிசோடியா

 
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பக்கா விடுவிக்கபட்டதை, தங்கள் குண்டர்களில் ஒருவரை காப்பாற்ற முழு பா.ஜ.க.வும், அவர்களின் அரசாங்கங்களும் ஈடுபட்டுள்ளன என மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார்.

பஞ்சாப் போலீசார் ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் தஜிந்தர் பால் சிங் பக்காவை டெல்லியில் ஜனக்புரியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனர். டெல்லியிலிருந்து பக்காவை பஞ்சாப் போலீசார் மொஹாலிக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர். வரும் வழியில் ஹரியானா போலீசார் பஞ்சாப் போலீசாரின் வாகனத்தை மறித்து குருக்ஷேத்ராவில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அடுத்த சில மணி நேரத்தில் குருஷேத்ரா காவல் நிலையத்துக்கு வந்த டெல்லி போலீசார் பஞ்சாப் காவல் துறையினரிடமிருந்து  தஜிந்தர் பால் சிங் பக்காவை டெல்லிக்கு அழைத்து சென்றனர். பின்னர் தஜிந்தர் பால் சிங் பக்கா விடுவிக்கப்பட்டார்.

தஜிந்தர் பால் சிங் பக்கா

பக்கா கைதுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, பக்கா கைது செய்யப்பட்டதை உள்ளூர் போலீசாருக்கு பஞ்சாப் போலீசார் தெரிவிக்கவில்லை என்று கூறி அவர்களுக்கு எதிராக டெல்லி போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். அதேசமயம், குருக்ஷேத்ரத்தில் பஞ்சாப் காவல்துறை தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் அம்மாநில காவல் துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

பா.ஜ.க.

தஜிந்தர் பால் சிங் பக்கா விடுவிக்கப்பட்டதை ஆம் ஆத்மியின் மணீஷ் சிசோடியா விமர்சனம் செய்துள்ளார். மணீஷ் சிசோடியா இது தொடர்பாக டிவிட்டரில், பஞ்சாபின் சகோதரத்துவத்திற்கு எதிராக பேசி கலவரத்தை தூண்டிய தங்கள் குண்டர்களில் ஒருவரை காப்பாற்ற முழு பா.ஜ.க.வும், அவர்களின் அரசாங்கங்களும் ஈடுபட்டுள்ளன. அரசிடம் இருந்தும் குண்டர்களின் வேலையை பறிக்கும் குண்டர்களின் கட்சி பா.ஜ.க.. கல்வி, சுகாதாரம், பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி இவர்கள் ஒரு போதும் பேசுவதில்லை என பதிவு செய்துள்ளார்.