திரிபுராவில் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாததால் மக்கள் பா.ஜ.க.வுக் கதவை காட்டுவார்கள்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

 
மாணிக் சர்க்கார்

திரிபுராவில் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாததால் மக்கள் பா.ஜ.க.வுக் கதவை காட்டுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மாணிக் சர்க்கார் தெரிவித்தார்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடந்த தினங்களுக்கு முன் திரிபுரா சென்று பா.ஜ.க. நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், எதிர்வரும் திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று தெரிவித்தார். ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றாத பா.ஜ.க.வுக்கு மக்கள் கதவை காட்டுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக் சர்க்கார், அகர்தலாவில் ரவீந்திர பவனில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:  எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாததால் மக்கள் பா.ஜ.க.வுக் கதவை (ஆட்சியிலிருந்து அகற்றுவார்கள்) காட்டுவார்கள். 2018 சட்டப்பேரவை தேர்தலில் அசாமை சேர்ந்த ஜென்டில்மேன் (ஹிமந்தா பிஸ்வா சர்மா) பா.ஜ.க.வுக்காக விரிவாக பிரச்சாரம் செய்தார். 

ஹிமந்தா பிஸ்வா சர்மா

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்  முதல் ஆண்டில் 50 ஆயிரம் வேலைகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்றும் அந்த தலைவர் உறுதி அளித்தார். ஆனால் அவர்கள் (பா.ஜ.க. தலைவர்கள்) எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றினார்களா என்பதுதான் கேள்வி. மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் கோபம் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் வேறுவிதமாக பேசுகிறார்கள். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் இனி திரிபுராவில் தன் முகத்தை காட்டமாட்டேன் என்று அந்த ஜென்டில்மேன் கூறினார்.  அவர் மீண்டும் வந்தால் அவர் மாநிலத்தை விட்டு வெளியேற்றப்படுவார் என்பதே உண்மை. 

பா.ஜ.க.

7வது மத்திய ஊதியக் குழுவை அமல்படுத்துவதை மறந்து விடுங்கள், ஊழியர்களுக்கு 35-36 சதவீத அகவிலைப்படி இன்னும் கிடைக்கவில்லை. தேர்தல் நெருங்கி வருவதால், ஊழியர்களின் கோபத்தை தணிக்க 5 முதல் 7 சதவீத டி.ஏ.வை விடுவிக்க அரசு முயற்சி செய்யலாம். அது உங்களை (மக்கள்) மீண்டும் பா.ஜ.க. கட்சிக்கு வாக்களிக்க தூண்டினால் மீண்டும் ஏமாறவும் தயாராக இருங்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால் அனைத்து காலி பணியிடங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.