பா.ஜ.க.வை எப்படி ஒற்றுமையாக எதிர்த்து போராடுவது என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.. கடிதம் எழுதிய மம்தா

 
மம்தா பானர்ஜி

பா.ஜ.க. அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, பா.ஜ.க.வை எப்படி ஒற்றுமையாக எதிர்த்து போராடுவது என்பது குறித்து விவாதிக்க வேண்டும் என பா.ஜ.க. அல்லாத முதல்வர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்

பிர்பூம் மாவட்டத்தில் 9 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமையன்று பா.ஜ.க. அல்லாத முதல்வர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: நமது நாட்டுக்கு தகுதியான அரசாங்கத்துக்கு வழிவகுக்கும் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் கொள்கை ரீதியான எதிர்க்கட்சி காரணத்திற்காக உறுதியளிப்போம். 

பிர்பூம் வன்முறை சம்பவம்

நாட்டில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. கருத்து வேறுபாடுகளை ஒடுக்க மத்திய அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. அடக்குமுறை பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து போராட தேசத்தின் முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டும். இந்த நாட்டின் நிறுவன ஜனநாயகத்தின் மீது ஆளும் பா.ஜ.க.வின் நேரடி தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலைகளை தெரிவிக்க நான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். மத்தியிலும்,பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். 

பா.ஜ.க.

பா.ஜ.க. அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, பா.ஜ.க.வை எப்படி ஒற்றுமையாக எதிர்த்து போராடுவது என்பது குறித்து விவாதிக்க வேண்டும். அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து மத்தியில் உள்ள அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து போராடுவது காலத்தின் தேவை. அனைவரின் வசதி மற்றும் பொருத்தத்திற்கு ஏற்ப ஒரு  இடத்தில் முன்னோக்கி செல்லும் வழியில் ஆலோசிக்க ஒரு கூட்டத்திற்கு அனைவரும் ஒன்று சேருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.