சுயநலமாக இருக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் சித்தாந்தம்... மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

 
நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

சுயநலமாக இருக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் சித்தாந்தம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் உள்ளது. மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்குவதற்கு முன் காங்கிரஸில் இருந்தார். காங்கிரஸ் தலைமையுடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியிலிருந்து மம்தா பானர்ஜி விலகினார். 1998 ஜனவரி 1ம் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். பிராந்திய கட்சியாக உருவான திரிணாமுல் காங்கிரஸ், 2016ல் தேசிய கட்சியாக உயர்ந்தது.

திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கி தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மம்தா பானர்ஜி உரையாற்றுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் மற்றும் பா.ஜ.க.வும் ஒரே அணியை சேர்ந்தவர்கள். சுயநலமாக இருக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் சித்தாந்தம். அரசியல் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டியது நம் கட்டாயம்.

பா.ஜ.க.

ஆனால் இன்று வரலாறு, புவியியல், அரசியல் ஆகியவை மறக்கப்படுகின்றன. கல்வியும், கலாச்சாரமும் மாறிவருகின்றன. பலப்படுத்தப்பட்ட கூட்டாட்சி அமைப்புடன் ஒன்றுபட்ட இந்தியாவை கட்சி நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 1) மம்தா பானர்ஜி டிவிட்டரில், இன்றைய தினம், 25 ஆண்டுகளுக்கு முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் உருவானது. பல ஆண்டுகளாக நாம் நடத்திய போராட்டங்களையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும்,  அநீதிக்கு எதிராக போராடுவதிலும், நம்பிக்கையைத் தூண்டுவதிலும் நாங்கள் ஆற்றிய பங்கையும் நினைவு கூர்கிறேன். தாய், மண் மற்றும் மக்கள் ஆகியவற்றின் சக்தியை நம்பியதற்காக அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன் என பதிவு செய்து இருந்தார்.