பா.ஜ.க. ஒரு கலவரக்காரர் மற்றும் ஊழல் கட்சி, அவர்கள் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்கள்... மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

பா.ஜ.க. ஒரு கலவரக்காரர் மற்றும் ஊழல் கட்சி. அவர்கள் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்கள் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க  முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி அந்த கட்சியின் மாநில கமிட்டி கூட்டத்தில் பேசியதாவது: பா.ஜ.க. ஒரு கலவரக்காரர் மற்றும் ஊழல் கட்சி. அவர்கள் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்கள். நேற்று (நேற்று முன்தினம்) சட்டப்பேரவையில் ஜனநாயகத்தை காப்பாற்றிய திரிணாமுல் காங்கிரஸின் பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி. நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 

பா.ஜ.க.

பா.ஜ.க.வை அகற்ற 2024 பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதால் மாற்று சக்தியை வழங்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. டார்ஜிலிங் மக்கள் சிரித்துக் கொண்டிருப்பதை நான் பாாக்க விரும்புகிறேன். கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்திற்கு (ஜி.டி.ஏ.) முன் அனைத்து கட்சிகளுடனும் அமர்ந்து மற்ற கட்சிகளுடன்  அனுசரித்து செல்ல முயற்சிப்பேன். 

போஸ்ட் ஆபிஸ், ரப்பர் ஸ்டாம்ப் போல் கவர்னர் இருக்க வேண்டும் என மம்தா விரும்புகிறார்… ஜகதீப் தங்கர் ஆவேசம்

ஜி.டி.ஏ. தேர்தல்களில்  கவனம் செலுத்துவோம். டார்ஜிலிங் தொடர்பாக கட்சியில் இருந்து யாரும் பேசுவதை நான் விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேற்கு வங்க  சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த திங்கட்கிழமை கவர்னர் ஜகதீப் தங்கர் தனது உரையை ஆற்ற முடியவில்லை. சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் வன்முறை நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தினர்.